பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வராம் நடிகர் மஹத் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். ஆரம்பத்தில் அனைவராலும் மிகவும் நல்லவர் என்று அறியப்பட்ட இவர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள இரண்டு நடிகைகளில் பேச்சை கேட்டு மிகவும் மோசமாக நடந்து கொண்டார்.

இவரின் செயல் நாளுக்கு நாள் அத்துமீற இவர் மீது ரசிகர்களுக்கு கோபமும் வலுத்தது. இதன் பிரதி பலனாக மஹத் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் கடந்த வாரத்திற்கு முந்தய வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆர்.ஜே.வைஷ்ணவி. மஹத் வெளியேற்றப்பட்டது குறித்தும், இவரின் செயல்பாடுகள் குறித்தும், ரசிகர்கள் சிலர் ட்விட்டரில் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். 

இதில் மஹத் தன்னிடம் கடுமையாக நடந்துகொண்டார். இதை நான் வெளியில் வந்த பிறகு தான் உணர்ந்தேன். மஹத்திற்கு வயது 32 ஆகியும் அவர் இன்னும் பக்குவப்படவில்லை என்பதை அவரது செயல்கள் உணர்த்துகிறது.

யாஷிகாவுடன் காதலில் அவர் இருந்ததில் நாங்கள் தலையிட்டது தேவையில்லாததாக நினைத்தார். அதிலிருந்து விலகி டாஸ்க்கில் கவனம் செலுத்தும் படி சொன்னோம். அவர் கேட்கவில்லை. பிடிவாதம் மற்றும் முரட்டு தனமான செயல்பாட்டால் அவர் வெளியேற்றப்பட்டார் என கூறியுள்ளார் வைஷ்ணவி.