‘குடி! ஆனால் அந்த குடி உன்னைக் குடித்துவிடாமல் பார்த்துக் கொள்!

மது பழக்கம் பற்றி வைரமுத்து எழுதிய கவிதை  இது. ஆனால் ‘மாது’ பழக்கம் பற்றி அவர் என்ன எழுதினார்? என்பது புதிராக இருக்கும் நிலையில், பிரபல பின்னணி பாடகி மற்றும் டப்பிங் ஆர்ட்டிஸ்டான சின்மயி சமீபத்தில் வைரமுத்துக்கு எதிராக கிளப்பிய ’மீ2’ சர்ச்சையை யாரும் மறந்திருக்க முடியாது. 

இந்த குற்றச்சாட்டுக்குப் பின் கவிப்பேரரசு வைரமுத்துவை ‘கலாப கவிப்பேரரசு’ என்று இணைய வெளிகளில் விளித்து அக்குறும்பு செய்தனர் சிலர். வைரமுத்து மீதான சாடல் சின்மயியோடு நின்றுவிடவில்லை! பழைய கல்லூரி மாணவிகள், அவர் இவரென சில புகார்கள் வெடித்து அடங்கியதை மறக்க முடியாது.

சின்மயியின் சீற்றத்துக்குப் பின் வைரமுத்து மீது தமிழ் திரையுலகத்தின் பார்வையும், விமர்சன பதிவுகளும் வேறு மாதிரியாகத்தான் இருந்தன. தனது குடும்பத்தில் இருந்தே அவர் விலக்கி வைக்கப்பட்டார்! எனும் ரீதியிலெல்லாம் புகைச்சல்கள் கிளம்பின. வைரமுத்துவின் நெருங்கிய திரையாளுமைகள் சிலர் கூட நழுவும் மீன்களாகின. 

‘ஆண்டாளைப் பழித்ததற்கு கிடைத்த ஆகப்பெரிய தண்டனை இது’ என்று பக்தர்கள் கூட்டம் பழியெடுத்த பரவசத்தில் கூத்தாடியது. வைரமுத்துவால் கவிதை இயற்றல் மற்றும் திரைப்பட பாடல் எழுதுதல் வாய்ப்புகளை இழந்திருந்த சிலர் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவர் மீதான ஆத்திரத்தை தணித்துக் கொண்டதும் தனி கதை. 

ஆக இப்படியாக புகழ் சிகரத்தின் உச்சியிலிருந்து உருட்டிவிடப்பட்டு அடிவாரத்தில் கிடந்தார் கவிஞர். ஆனால் தமிழகத்தில்தான் வாரத்துக்கு நான்கு வைரல் செய்திகள் வெடிக்குமே! அந்த வகையில் கஜாபுயல் மற்றும் அரசியல் பிரச்னைகள் பலவற்றில் மெதுவாக வைரமுத்து விவகாரம் மறைய துவங்கியது. அவர் மீதான குற்றச்சாட்டுகள் உண்மையோ இல்லையோ ஆனால் அவற்றை தமிழர் மனம் மெதுவாக  மறந்து, வேறு பிரச்னைகளில் கவனம் செலுத்திட துவங்கியது. 

இந்த சூழ்நிலையில்....கணிசமான நாட்களாக தனித்திருந்த வைரமுத்து மெதுவாக தன் இருப்பை மீண்டும் காட்டிக் கொள்ள துவங்கினார். கஜா புயலால் உடைமைகளை இழந்த சிலருக்கு அவர் கால்நடைச் செல்வங்களை வழங்கிய புகைப்படங்கள் வெளியானபோது அலட்சியமாக சிரிக்க துவங்கினர் மக்கள்

 

.

இந்நிலையில், நேற்று திருப்பூரில் நடந்த தமிழாற்றுப்படை நிகழ்வில் கலந்து கொண்டு அப்துல்ரகுமான் கவிதைகளையும் வாசித்திருக்கிறார் கவிஞர். கலந்து கொண்ட கூட்டத்தின் அத்தனை ஜோடி கண்களும் அவரை பகடியான பார்வையில் பார்க்கவில்லை! என்பது உண்மை. அவரது கவிதை மொழிக்கு கைதட்டல்களுக்கும் குறைவில்லை. 

ஆக மொத்தத்தில் மெதுவாக வெளி வர துவங்கியிருக்கிறார் கவிஞர்! அதேவேளையில், திருப்பூரில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கோயமுத்தூர் மாநகரின் சுவறுகளில் பாடகி சின்மயி ‘ஸ்லீவ்லெஸ்’ ஆடையணிந்து, ஃப்ரீக்கியான போட்டோக்களில் புன்னகைக்கிறாராம் மந்தகாசமாக!

என் ஆடை! என் உணர்வு! என் உரிமை!....