சின்மயியின் மிடு மேட்டரால் கொஞ்சம் காலம் தனது கருநாவுக்கு பூட்டுப்போட்டிருந்த கவிப்பேரரசு வைரமுத்து, தமிழாற்றுப்படை மூலம் மீண்டும் ஆணவப் பேச்சுகளுடன் மேடையேற ஆரம்பித்துவிட்டார்.

இயக்குனர் சிகரம் பாலசந்தருக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் கே.பி.90 என்ற நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதை நடத்தியவர் பாலசந்தரிடம் பல வருடங்கள் உதவியாளராக இருந்த மோகன்! இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பலரும் பாலசந்தரின் பெருமைகளை மட்டுமே பேச, வைரமுத்து மட்டுமே எப்போதும் போல தற்பெருமை பேசினார்.

அந்நிகழ்ச்சியில் பேசிய அவர் “ஒரு இசையமைப்பாளருடன் இணைந்து பல ஆண்டுகள் பணியாற்றினேன். ஒரு நிலையில் அந்த இசையமைப்பாளருடன் பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டது . என்ன செய்வது என்று அறியாமல் ஏழு ஆண்டுகள் இருந்தேன் . காரணம் நான் பிரிந்த அந்த இசை அமைப்பாளரின் திறமையும் ஆளுமையும் பெரியது . அந்த ஏழு ஆண்டுகளில் ஒரு நல்ல இசை அமைப்பாளரை உருவாக்குவோம் என்று எண்ணி முப்பத்தி ஏழு இசை அமைப்பாளர்களுடன் பணியாற்றினேன். யாரும் சோபிக்கவில்லை”.

“அந்த நிலையில் ஒரு நாள் பாலச்சந்தரிடம் இருந்து அழைப்பு வந்தது . போனால் திலீப் என்ற புது இசை அமைப்பாளர் . பாலச்சந்தரின் மூன்று படங்களுக்கு என்  பாடல். திலீப்பின் இசை . மூன்று  படத்திலும் பாடல்கள் ஹிட் . திலீப்தான் ஏ ஆர் ரகுமான் . மீண்டும் களம் எனக்கு வந்தது . திரையுலகில் என்னை அறிமுகப்படுத்தியவர் பாரதிராஜா. மீட்டெடுத்தவர் பாலச்சந்தர்”என்றார் வைரமுத்து. ஏழு ஆண்டுகள் அல்ல எழுபது ஆண்டுகளுக்கு மண்ணில் விழுந்து புரண்டாலும் தன்னால் ஒரு இசையமைப்பாளரை உருவாக்கமுடியாது என்கிற மிகச்சாதாரணமான ஞானம் கூட இவ்வளவு பெரிய கவிஞருக்கு இல்லையே என்று நிகழ்ச்சிக்கு வந்திருந்த பலரும் நக்கலடித்தனர்.