Asianet News TamilAsianet News Tamil

கமலின் கட்சி பெயருக்கு வைரமுத்துவின் மகன் கொடுத்த விளக்கம்.....

vairamuthu son give explanation for kamal party name
vairamuthu son give explanation for kamal party name
Author
First Published Feb 24, 2018, 11:31 AM IST


அரசியல்

ஒரு வழியாக கமல் அரசியலுக்கு வந்து விட்டார். கடந்த 21 ம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து தமது பயணத்தை துவக்கிய கமல் மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு தனது கட்சி பெயரையும் கொடியையும் அறிமுகம் செய்து வைத்தார்.மேலும் தனது கட்சி சின்னத்திற்கான விளக்கத்தையும் அவர் அளித்தார்.

மக்கள்

அதாவது தனது கட்சி சின்னத்தில் புதிய தென் இந்திய வரைபடம் தெரியும்.தென்னிந்தியாவின் 6 மாநிலங்கள் தெரியும்.ஒன்றுபட்ட திராவிட தென்னிந்திய மாநிலங்களை இந்த கைகள் குறிக்கும்.அதற்கு இடையில் உள்ள நட்சத்திரம் உங்களை குறிக்கும்.அதாவது மக்களை குறிக்கும்.

நீதி

மய்யம் என்ற பெயர் எதற்கு என்று கேட்கறீர்கள்.மக்களின் நீதியை மையமாக வைத்து தொடங்கப்பட்ட கட்சி அதான் மய்யம்.நீங்கள் லெஃப்டா அல்லது ரைட்டா என்று கேட்கிறார்கள்.அதற்கும் சேர்த்துதான் மய்யம் என்று வைத்துள்ளேன் என விளக்கம் அளித்தார்.

மய்யமா, மையமா

நடுவில் என்பதற்கு பொதுவாக நாம் மையம் என்று எழுதித்தான் பழகியுள்ளோம்.ஆனால் கமல் மய்யம் என்று குறிப்பிட்டுள்ளதால் மய்யம், மையம் இதில் எது சரியானது என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கு வைரமுத்துவின் மகனும் பாடலாசிரியருமான மதன் கார்க்கி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் விளக்கமளித்துள்ளார்.

தொல்காப்பியம்

அவர் கூறியதாவது இரு சொற்களும் ஒரே பொருளை கொண்டதுதான்.இரண்டிற்கும் சென்டர்(நடுவில்) என்று பொருள்.தமிழில் சொற்களை எழுதுவதற்கு நெகிழ்வு இருப்பதால் இதனை எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். இவ்வாறு எழுதுவதற்கான விதி தொல்காப்பியத்தில் இருப்பதால் மய்யம், மையம் இரண்டும் சரியானதுதான் என்று விளக்கம் அளித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios