ரஜினி,கமல், அஜித்,விஜய்களுக்குக் கூட அவ்வப்போது தோல்விகளைக் கொடுத்து வீட்டில் உட்கார வைத்த தமிழ்சினிமா வடிவேலுவுக்கு அப்படி ஒரு ஓய்வைக்கொடுக்கவேயில்லை. காரணம் நாலு படத்துக்கு ஒரு படமாவது வயிறு வலிக்க சிரிக்க வைக்க நான் கியாரண்டி என்று அவர் அள்ளி வழங்கிய வெரைட்டியான நகைச்சுவை பாத்திரங்கள்.

அரசியலில் கால்வைத்து அவ்வப்போது சறுக்கினாலும் சிங்கம் சிங்கிளாத்தான் வரும் என்பது மறு எண்ட்ரியில் விட்டதுக்கும் சேர்த்து ஸ்கோர் பண்ணிவிடுவார் வடிவேலு.

இன்று மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு காமெடி பண்ண வடிவேலுவை விட்டால் வேறு நாதியில்லை. எப்படியும் வடிவேலுவை வைத்து ஒர் நூறு மீம்ஸ்களாக தயாராகும் என்று ‘சூப்பர் டீலக்ஸ்’ பட இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா தனது டிசைனிலிருந்த அத்தனை கேரக்டர்களையும் வடிவேலுவாக மாற்றி மறுநாளே ஒரு டிசைனை வடிவேலு எவ்வளவு உச்சத்திலிருக்கிறார் என்பதற்கான அத்தாட்சி. நாகேஷ், கவுண்டமணிகளுக்கு அப்புறம் வடிவேலு ஒரு தனி சகாப்தம்.

இதுவரை அவர் வாங்கிய விருதுகளின் பட்டியல் கிடைக்கவில்லை. இருந்தாலும் அவரது 59 வது பிறந்த நாளான இன்று கலைமாமணியில் துவங்கி பத்மவிபூஷன், பத்ம பூஷன், பாரத்ரத்னா, நோபெல், ஆஸ்கார் ஆகிய ஒரு சில விருதுகளை மட்டும் வடிவேலுக்கு வழங்கி அந்த விருதுகளுக்கு பெருமை சேர்ப்போம்.