நகைச்சுவை

இம்சை அரசன் 23ம் புலிகேசி 2006 ம் ஆண்டு வந்த ஒரு நகைச்சுவை திரைப்படமாகும்.இதில் முதல் முறையாக நாயகனாக இரட்டை வேடத்தில் வடிவேலு கலக்கியிருப்பார்.இப்படத்தை சிம்புதேவன் இயக்க இயக்குனர் ஷங்கரின் எஸ்.பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.இந்நிலையில் நல்ல வெற்றி பெற்ற இப்படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க இயக்குனர் ஷங்கர் முன்வந்தார்.

முன்பணம்

அதன்படி படத்திற்கு இம்சை அரசன் 24 ம் புலிகேசி என்று பெயர் வைக்கப்பட்டு வடிவேலுவை நாயகனாக ஒப்பந்தம் செய்தனர்.சிம்புதேவனே இப்படத்தையும் இயக்குகிறார்.வடிவேலு இப்படத்தில் நடிக்க முன் பணமாக 1 1/2கோடி ரூபாய் தரப்பட்டது.இப்படத்தை சங்கர், லைக்கா நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க முடிவு செய்தார்.

வீண்

ஆனால் படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே நின்று விட்டது.இது சரியில்லை, அது சரியில்லைஅந்த வசனத்தை பேச மாட்டேன் என்று அடம் பிடித்த வடிவேலு ஷூட்டிங் வருவதை நிறுத்திக்கொண்டார். இதனால் 6 கோடி ரூபாயை போடப்பட்ட செட் வீணாகி போனது.

நோட்டிஸ்

இதையடுத்து தயாரிப்பாளர் சங்கத்தில் சங்கர் தரப்பில் புகார் கொடுக்கப்பட்டது. இதன்படி விளக்கம் கேட்டு வடிவேலுவுக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டது.ஆனால் வடிவேலு தரப்பிலிருந்து உரிய விளக்கம் தரப்படவில்லை.

அழுத்தம்

இதையடுத்து சங்கர் தரப்பு அழுத்தம் கொடுக்க வாங்கிய அட்வான்ஸ் தொகை  6 கோடி செட் அதற்கு வட்டி என மொத்தம் சேர்த்து ரூ 8 கோடி தர வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் கிடுக்குப்பிடியாக பிடித்தது.

விரைவில் படப்பிடிப்பு

எனவே ஒரு வழியாக இறங்கி வந்த வடிவேலு சிம்புதேவன் கூறிய படி படத்தை முடித்து கொடுக்கிறேன் என்று கூறியதை அடுத்து பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது.
எனவே இம்சை அரசன் 24 ம் புலிகேசி படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.