வலைதளங்களில் இன்று அதிகாலை முதலே  ‘வடசென்னை’ பற்றிய செய்திகளின் இம்சை  தாங்கமுடியாத அளவுக்கு இருக்கிறது. இவற்றுள் நல்லவேளை இப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்காமல் வெளியேறினார் என்பதும் ஒன்று. 

விஜய் சேதுபதிக்கும் ‘வட சென்னை’ படத்துக்கும் என்னய்யா சம்பந்தம் என்று விசாரித்ததில், இப்படத்தில் தற்போது இயக்குநர் அமீர் நடித்திருக்கும் கேரக்டரில் ஆரம்பத்தில் கமிட் ஆகியிருந்தவர் வி.சே.தானாம். ஒரு நாள் படப்பிடிப்பிலும் கலந்துகொண்டிருந்த நிலையில், அடுத்தடுத்த தேதிகளில் கால்ஷீட் சிக்கல் வருவதை வெற்றிமாறனிடம் நைசாக சொல்லி கழண்டுகொண்டாராம்.

சரி வடசென்னையில் இவரு நடிக்காம போனதுல என்ன நல்லது? 

எப்ப தான் சொந்தமா தயாரிச்ச ‘மேற்கு தொடர்ச்சி மலை’யை ரிலீஸ் பண்ணினாரோ அதுல இருந்து வாராவாரம் ‘இமைக்கா நொடிகள்’ ‘செக்கச் சிவந்த வானம்’,’ 96’ன்னு தொடர்ச்சியா அவரோட படங்களா ரீலீஸாகிட்டு இருக்கு. அடுத்து உடனே ரிலீஸாக ‘சூப்பர் டீலக்ஸ்’ம், ‘சீதக்காதி’யும் ரெடியா காத்திருக்காங்க. நடுவுல ‘வட சென்னையிலயும் அவரு நடிச்சிருந்தா... அய்யோ நாடு தாங்குமா’ என்கிறார்கள் அவரது செல்ல ரசிகர்களே.