ரிலீஸாகி இரண்டாவது வாரத்தை எட்டியும் ‘வடசென்னை’ படம் குறித்த சர்ச்சைகள் ஓயவே இல்லை. நடுத்தரவர்க்க மக்கள் நலன் விரும்பிகள், கடரோர மீனவர் சங்கம், குடித்தாலும் குறைவாக கெட்டவார்த்தை பேசுவோர் முன்னேற்றக்கழகம் என்று யார் யாரோ படத்துக்கு எதிராக குரல் எழுப்பிக்கொண்டே இருக்கிறார்கள். 

இனியும் அமைதிகாத்தால் வடசென்னைக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் பங்கம் வந்துவிடும் என்று நினைத்தோ என்னவோ, ‘படத்திலுள்ள ஆட்சேபகரமான கெட்டவார்த்தைகளையும், நிர்வாணக்காட்சிகள் இடம் பெற்ற அமீர்-ஆண்ட்ரியா முதலிரவுக் காட்சியையும் நீக்கிவிடப் போவதாக உறுதியளித்திருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன். 

இது தொடர்பாக மீண்டும் சென்சார்போர்டை அணுகியுள்ள வெற்றிமாறன் சுமார் ஒரு டஜன் வசனங்களையும் இரண்டு விஷுவல் ஷாட்களையும் தியேட்டர்களிலிருந்து நீக்கிக்கொள்ள சம்மதம் கேட்டு விண்ணப்பித்திருக்கிறாராம். வழக்கமா நாங்கதான் கட்ஸ் குடுப்போம். இப்ப எங்களுக்கேவா?’ என்று இந்த விபரீத நிகழ்வுக்கு ரியாக்‌ஷன் தரத்தெரியாமல் தவிக்கிறதாம் சென்சார்போர்டு.