Asianet News TamilAsianet News Tamil

சிக்ஸ் பேக் வைத்த முதல் நடிகை இவர்தான்... ஆச்சர்யத்துடன் கூறிய உதயநிதி...

uthayanithi talk about six pack actress
uthayanithi talk-about-six-pack-actress
Author
First Published May 7, 2017, 6:54 PM IST


உதயநிதி நடிப்பில் அடுத்த வாரம் வெளிவரவிருக்கும் படம் சரவணன் இருக்க பயமேன். இப்படத்தை இயக்குனர் எழில் இயக்க, ரெஜினா , சூரி , ஸ்ருஸ்தி போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தை பற்றியும்  ரெஜினாவுடன் நடித்தது  பற்றியும் ஒரு பேட்டியில் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில் .

இப்படம் குடும்பத்துடன் ஒரு ஜாலி டூர் சென்று வந்த அனுபவம் கொடுக்கும் என்றும்  ரெஜினா ஒரு நல்ல நடிகை , படத்தில் அவருக்கு கோபப்படும் கதாபாத்திரம் , ஆனால் நிஜத்தில் கோபப்படவே மாட்டார் என்றும் கூறினார்.

எனக்கு தெரிந்து தமிழ் சினிமாவில் 6பேக் வைத்திருக்கும் ஒரே நடிகை இவர் தான், காரணம் எப்போதும் உடல் பயிற்சிகள் பற்றி பேசிக்கொண்டும் , ஓய்வு நேரம் கிடைக்கும் போதெல்லாம் உடல் பயிற்சி செய்வார் என கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios