Ultra Modern in the films Homely Girl in Family Festivals - Do You Know?

படங்களில் அல்ட்ரா மாடர்னில் நடித்தாலும், குடும்ப விழாக்கள் என்று வந்துவிட்டால் ஹோம்லி கேர்ளாக மாறிவிடுகிறார் நடிகை சமந்தா.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை சமந்தா. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது திருமணத்திற்குப் பிறகும் பல படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். ஆனால், திருமணத்திற்கு முன்பு மாடர்ன் காஸ்டியூமில் கலக்கிவந்த சமந்தா, பொது நிகழ்ச்சி, குடும்ப நிகழ்ச்சி என்று வந்துவிட்டால் மட்டும் தன்னுடைய உடையில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

சமந்தாவின் நடிப்பு விஷயத்திலும், குடும்ப விஷயத்திலும் அவரது கணவர் நாக சைதன்யா தலையிடுவது இல்லை. படங்களில் கவர்ச்சியில் நடித்தாலும், குடும்ப விழா என்று வந்துவிட்டால் தானாகே ஹோம்லி லுக்கிற்கு மாறி விடுவேன் என்று சமந்தாவே தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நாகர்ஜூனா தயாரிக்கும் தெலுங்கு படம் ஹலோ. இதில், அகில் ஹீரோவாக நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஐதரபாத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட சமந்தா, தலை முதல் கால் வரை உடலை மறைக்கும் உடை அணிந்து வந்திருந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.