தனது தாத்தா முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மறைவை ஒட்டியும், கஜா புயலால் மக்கள் அவதிப்படுவதாலும் இந்த ஆண்டு உலகம் முழுவதிலுமுள்ள தனது ரசிகர்கள் பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்க்கும்படி அறிக்கை வெளியிட்டு களேபரம் நிகழ்த்தியிருக்கிறார் நடிகர் உதயநிதி ஸ்டாலின். 

அதை ஒரு முக்கிய டாபிக்காக கையில் எடுத்து, ... ப்ப்ப்ப்ப்ப்பா எவ்வளவு பெரிய காமெடிடா இது. இவருக்கு ரசிகருங்கள்லாம்  வேற இருக்காங்களா ?  என்று அந்த அறிக்கையை செமயாய் கலாய்த்துவருகிறார்கள் நெட்டிசன்கள்.

ஏழெட்டுப் படங்களில் நடித்திருந்தாலும் பெருமையாய் சொல்லிக்கொள்ளும்படி ஒரு ஹிட் கூட கொடுக்காதவர் உதயநிதி ஸ்டாலின். ஓரளவு சுமாராக ஓடிய ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ கூட சந்தானத்தின் ஹிட் லிஸ்டில்தான் இடம் பெறும். நிலைமை இவ்வாறு இருக்க, தன்னை அவ்வப்போது அஜீத், விஜய் ரேஞ்சுக்கு ஒரு ஸ்டாராக நினைத்துக்கொண்டு உதயநிதி சில காமெடிகள் பண்ணுவதும் அதை நெட்டிசன்கள் மொக்கையாய் கலாய்ப்பதும் வாடிக்கை.

இந்நிலையில் நேற்று தனது பிறந்த நாளை எங்கே இந்த உலகமே விமரிசையாய்க் கொண்டாடிவிடுமோ என்று பயந்துபோய் தனது ரசிகர் மன்றம் மூலம் உதயநிதி அனுப்பியிருக்கும் இந்த அறிக்கையைப் படித்து பலரும் வயிற்று வலியால் துடித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த மாதிரி நல்ல காமெடிகளை படத்துல சீனா வச்சி முன்னேறி வரப் பாருங்க பாஸ்.