உதயநிதி ஸ்டாலின் அடுக்கடுக்காக மூன்று படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவரின் கைவசம் 'சைக்கோ',  'ஏஞ்சல்',  'கண்ணை நம்பாதே' ஆகிய படங்கள் உள்ளன. 

இவர் நடிப்பில் கடைசியாக, இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான 'கண்ணே கலைமானே' திரைப்படம், கலவையான விமர்சனங்களை பெற்றாலும்,  இவரை கிராமத்து 
இளைஞர் நடிப்பை வெளிப்படுத்திய நடிகராக வேறுபடுத்தி காட்டியது. 

இந்நிலையில் இவர் தற்போது நடித்து வரும் 'கண்ணை நம்பாதே' திரைப்படம்,  சஸ்பென்ஸ், திரில்லர், நிறைந்த படமாக உருவாகி வருகிறது.  இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தில் உள்ள நிலையில் இன்று இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.  இந்த படத்தை மனோகரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ரெட் ஜெய்ண்ட் மூவீஸ் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.