udhayanithi acting village person role
உதயநிதி நடித்து வெளிவந்த 'சரவணன் இருக்க பயமேன்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதனால் தான் நடித்து வரும் படங்களின் கதையை தேர்வு செய்வதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது தளபதி பிரபு என்பவர் இயக்கத்தில் 'பொதுவாக என் மனசு தங்கம்' என்கிற படத்தில் நடிக்க கமிட் ஆகி நடித்துக்கொண்டிருக்கிறார்.
இந்த திரைப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக 'ஒரு நாள் கூத்து' திரைப்படத்தில் அறிமுகமான நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார்.
முதல் முறையாக உதயநிதி கிராமத்து இளைஞனாக இந்த திரைப்படத்தில் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் இவர் அதிக எடை கொண்ட திரௌபதி அம்மன் சிலையை தலையில் வைத்து சுமந்து வருவது போல் ஒரு காட்சி அமைக்கப்பட்டு இருந்ததாம்.
இதற்காக உதயநிதி அம்மனுக்கு முறையாக விரதம் இருந்து, காலில் செருப்பு போடாமல் அந்த கிராமத்தையே சுற்றி வந்தாராம். மேலும் இவரின் நடிப்பு பக்தியை பார்த்து படக்குழுவினர் ஆச்சர்யப்பட்டு போனார்களாம்.
