udhayanithi acting cinematographer in nimir

இப்படை வெல்லும் படத்தில் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் தற்போது அடுத்ததாக இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் நிமிர் படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் உதயநிதி.

இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக நமீதா பிரமோட் என்பவர் நடிக்க உள்ளார் இவர் ஏற்கெனவே மலையாளம், கன்னடம் போன்ற மொழி படங்களில் நடித்துள்ளார். இந்தப் படத்தை மூன் லைட் என்டேர்டைன்மெண்ட் சார்பில் சந்தோஷ் குர்விலா தயாரிக்க உள்ளார். 

மேலும் இந்தப் படத்திற்கு ‘ஒரு வார்த்தை பேசாதே’ பாடல் மூலம் அனைவரையும் கவர்ந்த தர்புகா சிவா இசையமைக்கிறார் என்கிற தகவல் அதிகார பூர்வமாக வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை உதயநிதியின் ரெய் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.