Udhayanidhi wants BJP to promote his movie Ippadai Vellum like Mersal

மெர்சல் படத்துக்கு பாஜக முழு ப்ரமோஷன் செய்தது போல "இப்படை வெல்லும்" படத்துக்கும் ப்ரமோஷன் செய்ய வேண்டும் என்று நடிகர் உதயநிதி ஸ்டாலின் பாஜக தலைவர்களை கலாய்த்துள்ளார்.

தளபதி விஜய் நடிப்பில் கடந்த தீபாவளியன்று வெளியான மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி வரி, டிஜிட்டல் இந்தியா, இந்து மதம் குறித்த சர்ச்சை , மருத்துவர்கள் குறித்த சர்ச்சையான வசனங்களை பேசியிருந்தார் தளபதி விஜய். இந்த வசனங்களுக்கு தமிழக பாஜக தலைவர்களான தமிழிசையும், எச்.ராஜாவும் எதிர்ப்பு தெரிவித்து மெர்சலை இந்தியா முழுவதும் உள்ள முன்னணி தொலைக்காட்சிகளில் விவாதம் நடத்தும் அளவிற்கு வெள்ளெவளுக்கு எடுத்து சென்றனர்.

மேலும் இந்த வசனங்களுக்காக எச்.ராஜா நடிகர் விஜய்யின் வாக்காளர் அட்டை, ஜோசப் விஜய் ஜீஸஸ் சேவ் என இருந்த லேட்டர் பேடு போன்றவற்றை தனது ட்விட்டரில் போட்டு விஜய் ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொண்டது மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழக மக்களின் கோபத்துக்கு உள்ளானார். அதுமட்டுமல்லாமல் இப்படத்தை இணையத்தளத்தில் பார்த்ததாகவும் கூறியதால் திரையுலகினரின் உச்சகட்ட கோபத்திற்கு உள்ளானார். ஆனாலும் காட்சிகளையும் நீக்க கடுமையாக போராடினார். நீ என்னதான் கத்தினாலும் காட்சிகளுக்கு கத்திரி போடா முடியாதுயென கைவிரித்து தயாரிப்பு நிறுவனம்.

இந்நிலையில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் "இப்படை வெல்லும்" படம் இந்த மாதம் 9-ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்த படம் ஒரு ஆக்ஷன் படமாகும். இதன் டிரெய்லர் காட்சிகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.

இதுகுறித்து பேசிய உதயநிதி ஸ்டாலின், மெர்சல் படத்துக்கு முழு ப்ரமோஷன் செய்தது பாஜக தலைவர்கள் தான். மெர்சல் படத்தை ப்ரமோஷன் செய்ததை போல என்னுடைய "இப்படை வெல்லும்" படத்துக்கும் எச்.ராஜாவையும், தமிழிசையையும் பேச வைக்கலாம்னு நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

உதயநிதியின் இந்த கலாய் பேச்சு தமிழிசை மற்றும் ஹெச் ராஜாவையும் எரிச்சலுக்கு உள்ளாகியிருக்கிறது.