கடந்த மே மாதம், பிரபல நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி முதல் டோஸ் தடுப்பூசி போட்டு கொண்ட நிலையில், தற்போது இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டு கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். 

கடந்த மே மாதம், பிரபல நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி முதல் டோஸ் தடுப்பூசி போட்டு கொண்ட நிலையில், தற்போது இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டு கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழக மக்களை பாடாய் படுத்தி வரும், கொரோனாவின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து கொள்ள பேராயுதமாக விளங்குவது தடுப்பூசிகள் மட்டுமே. எனவே, பிரபலங்கள் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்கிறார்கள். முதல் டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டவர்கள், இரண்டாவது டோஸ் தடுப்பூசி எடுத்து கொள்வது மிகவும் அவசியம். காரணம், இரண்டாவது டோஸ் தடுப்பூசி எடுத்து கொண்டால் தான் நம் உடலில், கொரோனாவை எதிர்க்கும் எதிர்ப்பு சக்தி அகதிகரிக்கும். எனவே முதல் டோஸ் மட்டும் போட்டு கொண்டு விட்டுவிடாமல் இரண்டாவது டோஸ் போட்டு கொள்வதும் மிகவும் அவசியம் என மருத்துவர்களும், சுகாதாரத்துரையும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், கடந்த மே மாதம் முதல் டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டதை தன்னுடைய சமூக வலைத்தளம் மூலம் கூறி, அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்வது அவசியம் என கூறிய, பிரபல நடிகரும், தயாரிப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி... இன்று இரண்டாவது டோஸ் தடுப்பூசியை போட்டுகொண்டுள்ளார். இதுகுறித்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அவர் கூறியுள்ளதாவது, " கொரோனா தொற்றுக்கு எதிரான போர்க்களத்தில் தடுப்பூசியே முதல்வரிசை பாதுகாப்பு ஆயுதம்". ஏற்கனவே முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிலையில், இன்றைய தினம் 2-வது டோஸ் தடுப்பூசியையும் செலுத்திக்கொண்டேன். தடுப்பூசியிட்டுக்கொள்வோம், கொரோனாவை விரட்டுவோம்... நன்றி. என பதிவிட்டுள்ளார். 

கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் சற்று தமிழகத்தில் குறைந்து வருவது நிம்மதியான விஷயம் என்றாலும், அனைவருமே தடுப்பூசி செலுத்தி கொள்வது மிகவும் அவசியம். இப்படி தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாது என்பது கிடையாது. ஒருவேளை தொற்று ஏற்பட்டாலும் அவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்புகள் இருக்காது. எனவே மத்திய - மாநில அரசுகள் மக்களை காப்பாற்ற எடுக்கும் முயற்சிக்கு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தந்தால் மட்டுமே கொரோனாவை தமிழகத்தை விட்டு விரைவில் விரட்டியடிக்க முடியும்.

Scroll to load tweet…