Asianet News TamilAsianet News Tamil

இரட்டை குவளையால் ஊரையும் சேரியையும் இணைத்து விட்டான் ... ஸ்டாலின் குடும்பத்தினர் வாழ்த்து...

இரட்டை குவளையால் ஊரையும் சேரியையும் இணைத்து விட்டான் "பரியேரும் பெருமாள்" வாழ்த்துகள்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

udhayanidhi stalin wishes Pariyerum Perumal
Author
Chennai, First Published Oct 6, 2018, 3:59 PM IST

இரட்டை குவளையால் ஊரையும் சேரியையும் இணைத்து விட்டான் "பரியேரும் பெருமாள்" வாழ்த்துகள்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

கடந்த வாரம் வெளியாகி, அனைத்துத் தரப்பினரின் பாராட்டுகளைப் பெற்ற படம் பரியேறும் பெருமாள். பா.இரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில், கதிர் நடிப்பில் உருவான இந்தப்படம், மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. `பரியேறும் பெருமாள்' படத்தை தி.மு.க தலைவர் ஸ்டாலின் நேற்று பார்த்தார். அவருடன் துர்கா ஸ்டாலின், உதயநிதி , கிருத்திகா உதயநிதி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா ஆகியோரும் திரைப்படத்தைக் கண்டுகளித்தனர்.

udhayanidhi stalin wishes Pariyerum Perumal

படம் பார்த்துவிட்டு தயாரிப்பாளர் பா.இரஞ்சித்தையும், மாரிசெல்வராஜையும் வெகுவாக பாராட்டிய ஸ்டாலின், “கலைஞர் பார்த்திருந்தால் பரியனை வெகுவாகப் பாராட்டியிருப்பார். சில வருடங்களுக்குப்பிறகு நான் பார்த்த சிறந்தபடம். திரைப்படக்குழுவினருக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று வாழ்த்தினார்.

இதனையடுத்து தனது ட்விட்டர் பக்கத்திலும், ‘பரியேறும் பெருமாள்’ பார்த்தேன். இன்னும் பல பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞர் தோன்ற வேண்டுமென்பதை உணர்த்தியது இந்தப் படம். இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில் அறிமுக இயக்குநரான மாரி செல்வராஜ் இயக்கியுள்ள படத்தை மறக்க முடியாது. சமூக அழுக்கை அகற்ற இன்னும் பல ‘பரியன்கள்’ தமிழ் சமூகத்திற்கு வர வேண்டும்!” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

udhayanidhi stalin wishes Pariyerum Perumal

இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின், “இரட்டை குவளையால் ஊர் என்றும் சேரி என்றும் பிரித்த நிலத்தில், அதே இரட்டை குவளையால் ஊரையும் சேரியையும் இணைத்து விட்டான் "பரியேறும் பெருமாள்" வாழ்த்துகள்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும், அன்பில் மகேஷ், தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல, தமிழ் சமுதாயத்திற்கே நம்பிக்கைமிகுந்த படைப்பு “பரியேறும் பெருமாள்”!  கருப்பியும், பரியனும் படம் முடிந்து வெளிவந்த பிறகும் மனதில் நிற்கிறார்கள்! இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் தயாரித்த ரஞ்சித் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்! என பதிவிட்டுள்ளார்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios