கர்ணன் இயக்குனர்  மாரி செல்வராஜ் கரண்ட் எம்.எல்.ஏ வான உதயநிதியை வைத்து படம் இயக்க தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியான கர்ணன் பெங்களூரில் நடைபெற்ற இனோவேட்டிவ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இந்திய திரைப்படமாக கர்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 'கர்ணன்' திரைப்படத்துக்குப் பிறகு, நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் துருவ் விக்ரமை வைத்து மாரி செல்வராஜ் கற்றது தமிழ், பரியேறும் பெருமாள் உள்ளிட்ட படங்களை இயக்கியிருந்த மாரி செல்வராஜ் இந்த படத்தை மாறுபட்ட கோணத்தில் வடிவமைத்து ரசிகர்களை ஈர்த்திருந்தார். 

இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரஜிஷா விஜயன் நடித்திருந்தார். மேலும் யோகிபாபு, கௌரி கிஷன், லால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். வி க்ரியேஷனின் இந்த படம் உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த பதத்தை தொடர்ந்து நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் துருவ் விக்ரமை வைத்து மாரி செல்வராஜ் படம் இயக்குவதாக ஒப்பந்தமானது.ஏற்கனவே 'நீலம்'புரொடக்‌ஷன்ஸ் இணைந்து மாரி செல்வராஜ் இயக்கி இருந்த பரியேறும் பெருமாள் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இது குறித்த தகவலை பா.இரஞ்சித்தும் வெளியிட்டார். அந்தப் படம் இந்திய அணிக்காக விளையாடிய ஒரு கபடி வீரரின் பயோபிக் என சொல்லப்படுகிறது. தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 'மஹான்' படத்தை நடித்து முடித்துள்ள துருவ் விக்ரம் மாரி செல்வராஜுடன் இணைய தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே கர்ணனை தொடர்ந்து ''மீண்டும் நானும் மாரி செல்வராஜும் இணையவிருக்கிறோம்'' என் று தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் சர்ப்ரைஸ் கொடுத்திருந்தார் . 



இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் கர்ணன் போன்ற கதை களத்தில் தன்னை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குமாறு மாரி செல்வராஜிடம் கேட்டுள்ளார். தற்போது பிஸியான எம்.எல்.ஏ வாக இருக்கும் உதயநிதி இந்த படத்திற்கு பிறகு சினிமாவை ஓரம் கட்டிவிட்டு முழு நேர அரசியலில் மட்டும் ஈடுபடப்போவதாக சொல்லப்படுகிறது. இவ்வாறு இருக்க எந்தப் படத்தை மாரி செல்வராஜ் முதலில் தொடங்குவார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்ததிருந்த நிலையில், இந்த வருட இறுதிக்குள் மாரி செல்வராஜ் -உதய நிதி இணையும் படம் சென்னையில் துவங்க உள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.