இயக்குனர் மிஷ்கின் 'துப்பறிவாளன்' படத்தைத் தொடர்ந்து, தற்போது இயக்கியுள்ள திரைப்படம் 'சைக்கோ' இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

மேலும் இதுவரை ஏற்று நடித்திராத, கண்தெரியாதவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தத்துரூபமாக இந்த படத்தில் நடிப்பதற்காக ஒரு சில பயிற்சிகளையும், உதயநிதி எடுத்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை அதிதி ராவ் மற்றும் நித்யா மேனன் ஆகிய இருவர் நடித்துள்ளனர்.  மேலும் சிங்கம்புலி, ஆடுகளம் நரேன், ரேணுகா, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  இந்த படத்தை டபுள் மீனிங் ப்ரொடக்ஷன் சார்பாக தயாரிப்பாளர் அருண் மொழி மாணிக்கம். 

2019 ஆம் ஆண்டே, வெளியாகி இருக்க வேண்டிய இந்த படம், ஒரு சில பிரச்சினைகள் காரணமாக ரிலீஸ் தேதி ஜனவரி 24-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை படக்குழுவினர் சில வாரங்களுக்கு முன் தெரிவித்திருந்தனர்.

இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.  ஏற்கனவே இந்த படத்தில் இருந்து வெளியான, உன்ன நெனச்சி பாடல், ரசிகர்களை ஈர்த்த நிலையில் தற்போது 'நீங்க முடியுமா...  நினைவு தூங்குமா' என்கிற லிரிக்கல் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.

இளையராஜாவின் இசையில், சித்ஸ்ரீராம் இந்த பாடலை பாடியுள்ளார். சைக்கோ த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலர் ஏற்கனவே வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. மேலும் இப்படம் உதயநிதி வாழ்க்கையில் மிக பெரிய மைல் கல்லாக இருக்கும் என தெரிவிக்கின்றனர் படக்குழுவினர். 

தற்போது வெளியாகியுள்ள லிரிக்கல் பாடல் இதோ...