மும்பையில் விபச்சாரத்தில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த இரண்டு நடிகைகள் கைது செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மும்பையில் விபச்சாரத்தில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த இரண்டு நடிகைகள் கைது செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நாட்டில் சுமார் 20 லச்சத்திற்கும் அதிகமான பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் விருப்பப்பட்டு இந்த தொழிலுக்கு வந்தவர்கள் இல்லை. குடும்ப சூழ்நிலை, காரணமாக இந்த தொழிலில் சிக்கியவர்கள். மேலும் சில பெண்கள், அதிக பணம் கிடைக்கும் என்கிற ஆசையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் முபையில் சமீப காலமாக அடுக்குமாடி பங்களா ஒன்றில், பெண்கள், மற்றும் ஆண்கள் அடிக்கடி வந்து செல்வதாக மும்பை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீசார் திடீர் என சந்தேகத்திற்கு இடமான அந்த அடுக்குமாடி பங்களாவை சோதனை செய்த போது, 2 பெண்கள் மற்றும் 3 ஆண்களை கைது செய்தனர்.

போலீசாரின் விசாரணையில், பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் இருவர் தமிழகத்தை சேர்ந்த நடிகைகள் என தெரியவந்துள்ளதாகவும், தற்போது, கொரோனா பரவல் காரணமாக வேலை இல்லாமல் இருக்கும் சூழ்நிலையாலும், குடும்ப கஷ்டத்திற்காகவும் இவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கூறி கண்ணீர் விட்டுள்ளனர். எனவே போலீசார் அந்த நடிகைகள் பற்றிய விவரங்களை வெளியே விடமால் பாதுகாப்பாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ஆண்கள் மூவரில் ஒருவர், அந்த பங்களாவின் உரிமையாளர் என்பதும் 2 பேர் புரோக்கர்கள் என தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை செய்து வருகிறார்கள்.