இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறியவர்கள் ஜி.வி. பிரகாஷ் மற்றும் விஜய் ஆன்டனி. இருவருக்குமே ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று பல பிரச்சனைகளை கடந்து வெளிவருவதாக இருந்த கடவுள் இருக்கான் குமாரு திரைப்படம்.

கருப்பு பணத்தை கட்டு படுத்தும் வகையில் மோடி அறிவித்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பாலும் மக்களிடையே நிலவும் பண தட்டுப்பாடலும் அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்க பட்டுள்ளது இந்த படத்தின் ரிலீஸ்.

கடவுள் இருக்கான் குமாரு படத்தின் ரிலீஸ் தேதியான அதே 17ஆம் தேதி இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி நடித்துள்ள சைத்தான் படம் ரிலீஸ் ஆகா உள்ளது.

ஆகையால் முதல் முறையாக இரண்டு இசையமைப்பாளர்களின் படமும் மோத உள்ளது.