கடந்த ஆண்டு விஸ்வரூபம் எடுத்து, திரைத்துறையில் பல இயக்குநர்கள், நடிகர்களின் தூக்கத்தை கெடுத்தது மீடூ விவகாரம். ஹாலிவுட், பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என அனைத்து திரைத்துறையைச் சேர்ந்த பல முன்னணி மற்றும் இளம் நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தனர். இதனால் பட வாய்ப்பிற்காக படுக்கைக்கு அழைத்த திரைப்பிரபலங்கள் பலரது முகத்திரை கிழிக்கப்பட்டது. 

தற்போது நடப்பு ஆண்டின் தொடக்கத்திலேயே மீடூ விவகாரம் தலை தூக்க ஆரம்பித்துள்ளது. பெங்காலி மொழியில் படங்கள், டி.வி. சீரியல்கள், வெப் தொடர்களில் நடித்து வருபவர் ரூபஞ்சனா மித்ரா. இவர் பெங்காலியில் பிரபல இயக்குநரான அரிந்தம் சில் மீது கூறியுள்ள பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பை கிளப்பியுள்ளது. 

சமீபத்தில் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் பேசியுள்ள ரூபஞ்சனா, பூமிகன்யா என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்துக் கொண்டிருந்த போது தனக்கு நேர்ந்த அவலம் குறித்து மனம் திறந்துள்ளார். அந்த சீரியலின் ஸ்கிரிப் குறித்து விளக்குவதாக கூறி, இயக்குநர் அரிந்தம் தனது அறைக்கு அழைத்துள்ளார். 

அங்கு சென்ற  ரூபஞ்சனாவிற்கு கதையை விரிவுபடுத்திக் கொண்டே தலை மேல் வைத்த கையை, அப்படியே கொஞ்சம், கொஞ்சமாக பின்புறம் வரை தடவி உள்ளார். இதனால் கடுப்பான ரூபஞ்சனா, ஸ்கிரிப் பற்றி மட்டும் பேசுங்கள் என்று கண்டிப்புடன் கூறியுள்ளார்.

அப்போது இயக்குநரின் மனைவி அங்கு வந்ததால் தப்பித்த ரூபஞ்சனா, இந்த சம்பவத்தை நினைத்து கதறி அழுதேன் என வேதனையுடன் தெரிவித்துள்ளார். ஆனால் நடிகையின் இந்த புகாரை மறுத்துள்ள இயக்குநர் அரிந்தம், அவர் அப்படி கூறியதற்கான காரணம் தனக்கு தெரியவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார்.