இந்தி மற்றும் கன்னட திரையுலகில் போதைப்பொருள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மரண வழக்கில் கைது செய்யப்பட்ட அவருடைய காதலி ரியா சக்ரபார்த்திக்கு போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பாலிவுட்டின் டாப் ஹீரோயின்களான தீபிகா படுகோனே, சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகிய 4 பேரிடமும் மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினர். 

மேலும் கன்னட திரையுலகிலும் போதைப்பொருள் புழக்கம் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த விவகாரத்தில் பிரபல இளம் நடிகைகளான ராகிணி திரிவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.இந்தியில் மிகவும் பிரபலமான சீரியலில் நடித்தவர் ப்ரீத்தா சவுகான். இவர் போதைப்பொருள் வாங்கும் போது போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் காத்திருந்து கைது செய்துள்ளனர். 


கடந்த இரு தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட ப்ரீத்தாவிற்கு நவம்பர் 8ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இந்நிலையில் தனக்கு ஜாமீன் கோரி ப்ரீத்தா சவுகான் தாக்கல் செய்த மனு மீது அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 4 சனிக்கிழமைக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரின் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.