ttv thinakaran meet vishal

முன்னாள் முதலமைச்சர் பன்னீர் செல்வமும் தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஒரே அணியாக இணைந்தனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதன் காரணமாக எப்போது வேண்டுமானாலும் தினகரன் ஆதரவாளர்கள் தற்போது உள்ள முதல்வரை மாற்றும் முயற்சியில் ஈடுபடலாம் என்று கூறப்படுவதால் தமிழக அரசியல் களம் பரபரப்பாகவே காணப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நடிகர் சங்க பொது செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால், டிடிவி தினகரனை அவருடைய வீட்டிற்கு சென்று திடீரென சந்தித்துள்ளார். இது குறித்து விஷால் தரப்பிலிருந்து கூறுகையில், வருகிற ஆகஸ்ட் 28 தேதி விஷாலின் தங்கை ஐஸ்வர்யாவிற்கும், கிரிதீஷ் என்பவருக்கும் திருமணம் நடைபெற உள்ளது என்றும், இதற்காக அவர் பல பிரபலங்களையும் அரசியல் தலைவர்களையும் சந்தித்து பத்திரிக்கை கொடுத்து வருகிறார் .இதன் காரணமாக தான் தற்போது விஷால் தினகரனை சந்தித்ததாக தெரிவித்துள்ளனர்.