தனது கட்சி வேட்பாளர் மைக்கேல் ராயப்பனின் பட ரிலீஸில் இருந்த பஞ்சாயத்துக்களைத் தீர்ப்பதற்காக பயங்கரமான அரசியல் பிசியிலும் டி.டி.வி தினகரனே இறங்கி தீர்த்துவைத்ததாகத் தகவல்.

கேப்டனின் கட்சியிலிருந்த மைக்கேல் ராயப்பன் சமீபத்தில் டி.டி.வி. அணியில் இணைந்து உடனே திருநெல்வேலி தொகுதி நாடாளுமன்ற வேட்பாளராகவும் சீட்டுப்பெற்றார். அரசியலில் தீவிரமான இயங்கிவந்தாலும் இவர் பார்ட் டைம் தயாரிப்பாளராகவும் உள்ளார்.

புதிய இயக்குநர் காளீஸ் இயக்கத்தில் நடிகர் ஜீவா நாயகனாக நடித்துள்ள படம் கீ.2016 ஆம் ஆண்டு நடுவில் தொடங்கப்பட்ட இப்படத்தில் நிக்கி கல்ரானி, ஆர்ஜே பாலாஜி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இணையதளம் உள்ளிட்ட தொழில்நுட்பக் குற்றங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.இப்படத்தைத் தயாரித்திருப்பவர் மைக்கேல் ராயப்பன். இவர் சிம்புவை வைத்து எடுத்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் பெரிய நஷ்டத்தைச் சந்தித்தது.

அதன் காரணமாக இந்தப்படமும் சிக்கலைச் சந்தித்தது. இப்போது இந்தப்படம் மே 10 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.ஆனாலும் படத்தை வெளியிட கடைசி நேரம் வரை இடையூறு ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.அதன்காரணமாக, தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், டிடிவி தினகரனிடம் போய் முறையிட தினகரன் பஞ்சாயத்து பண்ணுபவர்களை போனில் அழைத்து எச்சரித்ததாகத் தெரிகிறது.

உடனே அனைத்துப் பிரச்சினைகளும் பட வெளியீட்டுக்கு வழிவிட்டு நிற்க,  திரையரங்க வெளியீட்டு உரிமையை உரிமைகளை சுக்ரா ஸ்டூடியோஸ் என்கிற நிறுவனம் பெற்றுள்ளது. ஸோ 4 வருட வெயிட்டிங்கில் இருந்த ’கீ’ நாளை மறுநாள் திரைக்கு வருகிறது.