முன்பெல்லாம் ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மைய குடிசைக்கே போய் ஆசி வாங்கி வந்தார்கள் திரையுலக பிரமுகர்கள். தூரம், நேரம் என்று பல்வேறு சிக்கல்கள் இருப்பதால் பிரபலங்களை தேடி ஜக்கியே நேரில் வந்து அருள் பாலித்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் அன்னை இல்லத்தில்தான் இந்த அருமையான சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோடம்பாக்கத்தின் முக்கிய பிரமுகர்கள் பலரும் அங்கு கூடினார்கள். சுடச்சுட விருந்தும் இருந்தது. அன்னை இல்லத்தின் தினப்படி ஸ்பெஷலே ஊர்வன, பறப்பன போன்ற அசைவ ஐட்டங்கள்தான். ஆனால் ஜக்கிக்காக அன்று ஜீவகாருண்யம் கடை பிடிக்கப்பட்டது.

நயன்தாரா, தமன்னா, காஜல் அகர்வால் உள்ளிட்ட பழைய பக்தைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டாலும், நேரில் வந்து அருளாசி வாங்கிக் கொண்டவர் த்ரிஷா மட்டுமே..!