பெண்களை மதிக்காத நீங்கள் எல்லாம் தமிழர்களா? என தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகை திரிஷா கேள்வி எழுப்பியுள்ளார். 
நடிகை திரிஷா பீட்டா அமைப்புக்கு ஆதரவாக அந்த அமைப்பில் இருப்பவர். தமிழகத்தின் பாரம்பரியம் அறியாமல் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பீட்டாவின் நிலையை ஆதரிப்பவர். இதனால் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

நேற்று காரைக்குடியில் திரிஷா ஆர்யா நடிக்கும் கர்ஜனை படபிடிப்பு நடக்கும் இடத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர் அமைப்புகளால் திரிஷா கேரவனில் ஒளிந்துகொண்டார். படபிடிப்பு நடக்காமல் திரும்பி போக வேண்டியதானது. 

வாலைதளங்களில் பீடா ஆதரவு திரிஷா மரணமடைந்தது போல் சித்தரித்து தோற்றம் மறைவு என கண்ணீர் அஞ்சலி போஸ்டர் போட்டது வைரலாகி வருகிறது. திரிஷாவின் டுவிட்டர் பக்கத்தில் அவரை பலர் விமர்சித்து வருகின்றனர்.

இதை பார்த்து கொந்தளித்து போன திரிஷா பெண்களை கேவலாமாக எழுதுகிறீர்கள் , நான் இறந்து போனதாக சித்தரிப்பது சரியா ? நான் பீட்டா அமைப்பில் தான் இருக்கிறேன் ஆனால் ஜல்லிக்கட்டை எதிர்க்கவில்லை என பல்டி அடித்துள்ளார்.

அதே நேரம் பெண்களை அவதூறாக எழுதுபவர்கள் தமிழர்கள் என்று சொல்லிக்கொள்ள வெட்கப்பட வேண்டும் என்றும் தன்னை விமர்சிப்பவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.