மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்ட, கலைஞர் கருணாநிதியின் உடலுக்கு திமுக தொண்டர்கள், பொதுமக்கள் மற்றும் பிரபலங்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். 

இந்நிலையில் இன்று காலை, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ஆ.ராசா. கே.என்.நேரு, மா.சுப்பிரமணியம், உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கருணாநிதி நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் நடிகை திரிஷா, தன்னுடைய அம்மாவுடன் வந்து கருணாநிதியின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இவர், தமிழ்நாட்டு அரசியலுக்கும், திரைத்துறைக்கும் கருணாநிதியின் மறைவு மிகப்பெரிய இழப்பு என தெரிவித்தார்.  தனக்கு அவருடைய குடும்பத்தில் உள்ள உதயநிதி உள்ளிட்ட சிலரை தெரியும் என்றும், பன்முக திறமையோடு விளங்கிய ஒருவரை நாம் இழந்திருக்கிறோம் என்றும் தன்னுடைய வருத்தத்தை தெரிவித்தார்.