ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு பெருகி வரும் நிலையில் நடிகை திரிஷா நடிக்கும் படபிடிப்பில் ஜல்லிக்கட்டு ஆதர்வாளர்கள் முற்றுகையிட்டு மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தனர். போராட்டக்காரர்களுக்கு பயந்து திரிஷா கேரவனுக்குள் போய் ஒளிந்துகொண்டார்.

தமிழர்களின் பாரம்பரிய காளை இனத்தை அழிக்கும் நோக்கில் , விவசாயத்தை கையகப்ப்டுத்தும் நோக்கில் , பால் உற்பத்தி துறையில் நுழையும் நோக்கில் அமெரிக்க நிறுவனங்கள் கையில் எடுத்தது தான் ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்படுகிறது என்ற கோஷம்.

பீட்டா என்கிற அமெரிக்க சார்ந்த நிறுவனம் வழக்கு தொடுக்க அதற்கு ஏற்றார் போல்  விலங்கு நல ஆர்வலர்கள் என்ற போர்வையில் திரை நட்சத்திரங்களையும் அமர்த்தி ஆதரவு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு 3 வது ஆண்டாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்க முடியாத நிலை உள்ளது. இந்த நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக  லட்சக்கணக்கான இளைஞர்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தில் குதித்துள்ளனர்.

ஜல்லிக்கட்டின் பாரம்பரியம் தெரியாமல் , அதன் பின்னனி தெரியாமல் திரை பிரபலங்கள் சிலர் பீட்டாவின் பேச்சை கேட்டு கருத்து தெரிவிப்பதால் பிரச்சனை திசை திருப்பப்படுகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டை சேர்ந்த நடிகை திரிஷா ஜல்லிக்கட்டுக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார். 

இது தமிழக இளைஞர்களிடையே கோபத்தை கிளப்பி உள்ளது. திரிஷாவுக்கு வலைதளம் ,ஃபேஸ்புக் மூலம் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை திரிஷா , ஆர்யா நடிக்கும் கர்ஜனை தமிழ் பட ஷூட்டிங்     சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில்       நேமத்தான் பட்டி என்ற  இடத்தில்  இன்று நடந்தது.

 அப்போது படபிடிப்பு  நடக்கும் இடத்தில்  50 க்கு மேற்பட்ட சமுக ஆர்வலர்கள்   , தமிழ் தேசிய முன்னனி, நாம் தமிழர் இயக்கம், காரைக்குடி மக்கள் மன்றம் மற்றும் மாணவர்கள் முற்றுகையிட்டனர். 

படபிடிப்பு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஜல்லிக்கட்டு பாரம்பரியம் அறியாமல் நுனிப்புல் மேய்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும் திரிஷா தமிழ் படத்தில் மட்டும் ஏன் நடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து முழக்கமிட்டனர். திரிஷா மன்னிப்பு கேட்கும் வரை படபிடிப்பு நடக்ககூடாது என்று முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டம் நடப்பதை பார்த்து பயந்து போன திரிஷா கேரவனுக்குள் சென்று ஓடி ஒளிந்துகொண்டார். படபிடிப்பும் ரத்து செய்யப்பட்டது.