கடந்த 4,5 நாட்களாக நெட்டிசன்களிடமும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களிடமும், சிக்கி சின்னாபின்னமாகி போனவர் பிரபல நடிகையான த்ரிஷா.
விலங்கு நல அமைப்பான பீட்டாவின் தூதர்களில் ஒருவரான த்ரிஷா ஜல்லிக்கட்டுக்கு எதிரான விசயத்தை முன்னெடுத்ததால் அவருக்கெதிரான கோஷங்கள் கிளம்பின.

இதில் ஒரு படி மேலே பொய் த்ரிஷா இறந்துவிட்டது போல போஸ்டர்கள் அடித்து ஒட்டினர்.இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த போஸ்டருக்கு பிறகும் த்ரிஷாவின் ட்விட்டர் அக்கவ்ண்டில் சில பரபரப்பு கருத்துக்கள் பரவின.
அதாவது தாம் தொடர்ந்து ஜல்லிகட்டு எதிர்ப்பேன் எனவும் யாருக்கும் பயப்பட மாட்டேன் என்றும் த்ரிஷா தனது ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
இதனால் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தொடர்ந்து கொந்தளிப்புக்கு ஆளானார்கள்.

இந்நிலையில் த்ரிஷாவின் தாயார் உமா கிருஷ்ணன் சென்னையில் போலீஸ் கமிஷனர் ஜார்ஜிடம் புகாரளித்துவிட்டு வெளியே வந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தனது த்ரிஷாவின் எதிரிகள் தொடர்ந்து சதி செய்வதாக கூறினார்.
அவரது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு மர்ம நபர்கள் ஊடுருவி கருத்து தெரிவித்து விட்டதாக அவர் தெரிவித்தார்.
ஏற்கெனவே த்ரிஷா தெரிவித்திருந்தது போல நாங்கள் பச்சை தமிழர்கள் நாங்கள் ஏன் தமிழ் பாரம்பரியத்துக்கு எதிராக இருக்கப்போகிறோம் என்று அவர் தெரிவித்தார்,

பீட்டா என்பது மிகப்பெரிய ஒரு அமைப்பாகும்.
அதில் ஒரு பிரிவான நாட்டு நாய்களை பாதுக்காக்கும் அமைப்பில் தான் த்ரிஷா உள்ளார்.
அவருக்கு ஜல்லிக்கட்டு ஆதரவோ எதிர்ப்போ எப்போதும் கிடையாது.
த்ரிஷா ஜல்லிகட்டுக்கு எதிரான கருத்தை எப்போதும் தெரிவித்ததில்லை என உறுதியாக தெரிவித்தார்
