சமீபத்தில் தீபாவளி தினத்தில் தனுஷ் மற்றும் த்ரிஷா நடித்து வெளிவந்த 'கொடி' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் சூப்பர் ஹிட்டாகி நல்ல வசூலை தந்து கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் த்ரிஷா சமீபத்தில் அளித்த பேட்டியில் ஒன்றில் தனது திருமணம் நின்று போனதற்கான காரணத்தை முதல்முதலாக மனம்விட்டு கூறியுள்ளார்.

என்னை திருமணம் செய்ய இருந்தவர் சினிமாவில் இருந்து விலகிவிட வேண்டும் என்று வற்புறுத்தினார் என்றும். 

ஆனால் என்னால் அது முடியாது என்பதால் திருமணத்தை நிறுத்திவிட்டேன். தனது இறுதி மூச்சு இருக்கும் வரை நடிக்க வேண்டும் என்று தான் விரும்புகிறேன்' என்று த்ரிஷா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

த்ரிஷாவுக்கும் தொழிலதிபர் வருண்மணியனுக்கும் கடந்த 2015ஆம் ஆண்டு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது என்பதும், அதே வருடம் மே மாதம் நிச்சயதார்த்த முறிவு ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.