trisha acting heroine important movie

நயன்தாரா அனுஷ்கா

நயன்தாரா அனுஷ்கா போன்ற நாயகிகள் ஹீரோக்களை லவ் பண்ணும் வேலையை விட்டு விட்டு ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட கதாபாத்திரங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றனர். நயன்தாரா மாவட்ட ஆட்சியராக நடித்து வெளியான அறம் படம் மாபெரம் வெற்றி பெற்றது. அனுஸ்காவின் நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியான பாகமதி படமும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. அருந்தத்திக்கு பின் இந்த படத்தில் மிரட்டியுள்ளார் அனுஷ்கா.

மோகினியான திரிஷா

தற்போது அந்த லிஸ்டில் இணைந்து விட்டார் திரிஷா. இவர் நாயகி என்ற படத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. தற்போதும் அவர் நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட மோகினி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

குற்றப்பயிற்சி

அதைத் தொடர்ந்து த்ரிஷாவின் அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த படமும் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமாம்.
இந்த படத்திற்கு குற்றப்பயிற்சி என்று பெயரிடப்பட்டுள்ளது. 

ரஜனி பண்டிட்

இந்தியாவின் முதல் பெண் துப்பறிவாளர் 'ரஜனி பண்டிட்' அவர்கள் மிகச்சிறப்பாக கையாண்ட ஒரு வழக்கு குறித்த கதைதான் இந்த படம் என்றும் இந்த படத்தை வெர்னிக் என்பவர் இயக்கவுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அர்ஜுன் ரெட்டி புகழ் ராதன்

வெர்னிக் திரைப்பட இயக்குநர் பாலாவிடம் அசோசியேட் இயக்குநராக இருந்தவர் ஆவார். தெலுங்கில் சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி திரைப்படத்திற்கு இசையமையத்த ராதன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.