கடந்த 2015ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற படம் NH10. இது ஒரு த்ரில்லர் படம், தற்போது இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

அனுஷ்கா சர்மா, நீல் பூபாளம் முக்கிய கேரக்டர்களில் நடித்த இந்த படத்தின் ரீமேக்கில் அனுஷ்கா சர்மாவின் வேடத்தில் த்ரிஷா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து த்ரிஷா கூறியபோது, 'இந்த படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவது உண்மைதான். ஆனால் இன்னும் நான் எந்த புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்படவில்லை என்று கூறியுள்ளார்.

புதுமுக இயக்குனர் ஒருவர் இயக்கவுள்ள இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்கள் மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்க படுகிறது.