உலகக் கோப்பை கிரிக்கெட் ரிசல்ட் குறித்து ஓரளவு சரியாகக் கணித்ததால் ட்ரெண்டிங் ஜோதிடர் என்றும் இன்னும் சிலரால் பயங்கர டுபாக்கூர் ஜோதிடர் என்றும் செல்லமாக அழைக்கப்படும் பாலாஜி ஹாசன் இன்று சி.பி.ஐ.யின் பிடியில் சிக்காமல் எஸ்கேப் ஆகிக்கொண்டிருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஜாதகம் குறித்து தனது முகநூல் பக்கத்தில் ஒரு கணிப்பு வெளியிட்டுள்ளார். அவரது கணிப்புப்படி ப.சிதம்பரம் இதே கண்ணாமூச்சி ஆட்டத்தை இன்னும் 5 நாட்களுக்குத் தொடர்ந்தால் கைதாகாமல் இருக்க வாய்ப்புண்டு என்கிறார்.

பாலாஜி ஹாசனின் கணிப்பு இதோ...நீதிமான் என்று அழைக்கக்கூடிய ( சனி ) பார்வை இன்றைய பிரசன்ன லக்கனத்தில் இல்லை

எனவே இன்றோ நாளையோ பிடி பட வாய்ப்பு குறைவு

சந்திரன் மிதுன ராசிக்கு செல்லும் 
காலம் ( 26.8.19 - 28. 8.19 ) 
அகப்பட வாய்ப்புகள் உண்டு இன்னும் ஐந்து நாள் ஜாக்கிரதையாக இருந்தால் 
தப்பிக்கலாம்.

'' சிறுத்தை சிக்கும். சிலுவண்டு சிக்காது டோய் ''

அல்லது தானே சரண்டர் ஆவது நன்மை தரும். என்று பதிவு செய்துள்ளார் பாலாஜி ஹாசன். அதன் பின்னூட்டங்களில்,...திரு பாலாஜி அவர்களே உங்கள் தொழில் பக்தியை எண்ணி நாங்கள் மெச்சினோம்.வரும் காலங்களில் திருடர்கள் கொள்ளையர்கள் உங்களை அணுக கூடும் எந்த தேதியில் கொள்ளை அடித்தால் தப்பிக்கலாம் என்று கேட்கக்கூடும் அதனால் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவும்’என்று ஒரு பிந்தொடர்பாளர் கமெண்ட் அடித்துள்ளார்.