Asianet News TamilAsianet News Tamil

பாஜக பிரமுகர் கொடுத்த புகாரின் அடிப்படையில்... நடிகை மீது தேச துரோக வழக்கு பதிவு..!

பிரபல நடிகை மற்றும் இயக்குனர் மீது, பாஜக பிரமுகர் கொடுத்த புகாரின் பேரில் அவர் மீது, அதிரடியாக தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Treason case registered against the actress
Author
Chennai, First Published Jun 11, 2021, 7:56 PM IST

பிரபல நடிகை மற்றும் இயக்குனர் மீது, பாஜக பிரமுகர் கொடுத்த புகாரின் பேரில் அவர் மீது, அதிரடியாக தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல நடிகை மற்றும் இயக்குனர் ஆயிஷா சுல்தான். தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்து கொண்ட போது, லட்சத்தீவு குறித்து பேசினார். அப்போது லட்சத்தீவிற்கு தற்போது நிர்வாகியாக நியமனம் செய்யப்பட்டுள்ள  பிரஃபுல் படேல் என்பவர் மத்திய அரசால் அனுப்பி வைக்கப்பட்ட பயோவெப்பன் என்று இவர் கூறியது தான் தற்போது இவர் மீது பாஜக பிரமுகர் வழக்கு தொடர காரணமாக அமைந்துள்ளது.

Treason case registered against the actress

இது குறித்து பாஜக பிரமுகர் அப்துல் காதர் ஹாஜி என்பவர், காவல் நிலையத்தில் நடிகை மீது புகார் அளித்தார். அவரது புகாரின் அடிப்படையில் தற்போது  நடிகை சாயிஷா சுல்தான் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் நடிகை அப்படியே அந்தர் பல்டி அடிப்பது போல்,  லட்சத்தீவு நிர்வாகி பிரஃபுல் பட்டேலை பயோவெப்பன் என தான் பேசியது நாட்டையோ அரசையோ குறிப்பிட்ட அல்ல என்பது போல் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது கொழுந்து விட்டு எரிந்து வருகிறது.

லட்ச தீவு ஒரு யூனியன் பிரதேசம், அங்கு யார் வேண்டுமானாலும் நினைத்த நேரத்திற்கு செல்ல முடியாது, அந்த யூனியன் பிரதேசம் அனுமதி கொடுத்தால் மட்டுமே அங்கு செல்ல அனுமதி உண்டு.  தற்போது லட்சத்தீவு யூனியன் பிரதேசத்தில் நிர்வாகியாக செயல்பட்டு வரும் பிரஃபுல் படேல், அதிரடியாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, மாட்டிறைச்சிக்கு தடை, மது பானங்களுக்கு தடை, சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமே மது என்பது போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருவதற்கு பலர் தங்களது எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios