தரமான சம்பவம்ன்னு நாம சொல்லி கேள்விப்பட்டிருப்போம், பெருசா பார்த்திருக்க வாய்ப்பில்லை, அப்படி ஒரு சம்பவம் நடத்தி ஆம்பூரை அதகளப்படுத்தி விட்டுஉள்ளனர் அஜித் ரசிகர்கள்.

இன்று மே 1, தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான அஜித்குமாரின் 48வது பிறந்த நாளை தமிழகத்தில் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர் அவரது ரசிகர்கள். அவர் பிறந்த கேரளா மாநிலத்திலும் கொண்டாடிவருகின்றனர். சில வருடங்களுக்கு முன்பு அஜித், தனது ரசிகர் மன்றங்களை கலைத்த பின்பும் அவரது தீவிர ரசிகர்கள் அங்கங்கு அவரது பிறந்த நாளுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.

அந்த வரிசையில், வேலூர் மாவட்டம் ஆம்பூர் அண்ணா பேருந்து நிலையத்தில், ஆம்பூர் நகர அஜித் ரசிகர் மன்றம் சார்பில் நகர தலைவர் ரஞ்சித்குமார் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடினர். அதோடு, அங்கு வரவைக்கப்பட்டுயிருந்த மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு, பேனா, பென்சில் வழங்கினர்.

அதோடு, ஆம்பூர் அண்ணா பேருந்து நிலைய ஆட்டோ ஸ்டேண்டில் உள்ள சுமார் 20க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் ஓடுகின்றன. இவர்கள் அனைவரும் அஜித் ரசிகர்களான உள்ளனர். இந்நிலையில் இன்று  அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு, இன்று ஒருநாள் முழுவதும் ஆட்டோக்கள் இலவசமாக பயனாளிகள் பயன்பாட்டிற்கு வழங்கப்படும் என்று தெரிவித்தனர். மேலும் தல பிறந்த நாள் கொண்டாடும் நாங்கள் பல பிறந்தநாளை அவருக்காக கொண்டாடி இதுபோன்று மக்களுக்கு பல நல்ல விஷயங்களை செய்வோம் என உறுதி ஏற்றுக்கொண்டனர்.