திரைப்படமாகும் பிக்பாஸ் புகழ் திருநங்கை அஞ்சலியின் கதை...
அஞ்சலி அமீர். கேரளாவைச் சேர்ந்த திருநங்கையான இவர் பிக்பாஸ் சீஸன் 1’நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கேரள மக்களின் கவனத்தை ஈர்த்தார். பின்னர் திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்த அவர் மம்முட்டி அஞ்சலி நடிப்பில், ராம் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளிவந்த ‘பேரன்பு’படத்தில் ஒரு திருநங்கையாகவே நடித்து பார்வையாளர்களின் ஒட்டுமொத்தப் பாராட்டையும் பெற்றார்.
ராம் இயக்கத்தில் மம்முட்டி,அஞ்சலி நடித்த ‘பேரன்பு’பட நடிகையும் திருநங்கையுமான அஞ்சலி அமீரின் சொந்தக் கதை விரைவில் திரைப்படமாக எடுக்கப்பட உள்ளது. அப்படத்தில் தனது பாத்திரத்தில் அஞ்சலி அமீரே நடிக்கிறார்.
அஞ்சலி அமீர். கேரளாவைச் சேர்ந்த திருநங்கையான இவர் பிக்பாஸ் சீஸன் 1’நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கேரள மக்களின் கவனத்தை ஈர்த்தார். பின்னர் திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்த அவர் மம்முட்டி அஞ்சலி நடிப்பில், ராம் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளிவந்த ‘பேரன்பு’படத்தில் ஒரு திருநங்கையாகவே நடித்து பார்வையாளர்களின் ஒட்டுமொத்தப் பாராட்டையும் பெற்றார்.
இந்நிலையில் அவரது வாழ்க்கைக் கதையே திரப்படமாக எடுக்கப்படவிருக்கிறது. சினிமாவாகிறது. இளவயதில் சிறுவனாக இருந்து பின்னர் திருநங்கையாக மாறிய இவரது வாழ்க்கைப் போராட்டம்தான் படத்தின் மையக்கருவே.இது போக பொதுவான திருநங்கைகளின் பிரச்னைகளையும் இந்தப் படம் பேசும் எனத் தெரிகிறது. படத்தை டினே ஜார்ஜ் என்பவர் இயக்குகிறார்.இதுபற்றி அஞ்சலி அமீர் கூறும்போது, எனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். இந்தப் படத்தில் நான் நானாகவே நடிக்கிறேன். அடுத்த வருடம் மே மாதம் ஷூட்டிங் தொடங்குகிறது. அதற்கான பூர்வாங்க வேலைகள் தொடங்கிவிட்டன’என்கிறார்.