T.Rajendhar talk about rajinikanth political entry
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் அரசியல் சூழல் குறித்து பல பிரபலங்கள் தங்களுடைய கருத்தை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த மாதம் தன்னுடைய ரசிகர்களை மாவட்ட வாரியாக சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்ட, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து சூசகமாக பேசினார்.
ரஜினியின் அரசியல் பேச்சுக்கு சிலர் ஆதரவு தெரிவித்தாலும் ஒரு சிலர் அவர் அரசியலுக்கு வருவதற்கு எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல இயக்குனர், பாடகர், தயாரிப்பாளர் என்று பல திறமைமைகளை கொண்ட டி.ராஜேந்தரிடம் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கேள்வி எழுப்பியபோது... பதில் அளித்த அவர் ரஜினியை கலாய்ப்பது போல் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில்... ஒரு திரைப்படம் வெளியே வந்தால் தான் அந்த படம் குறித்து விமர்சனம் செய்யமுடியும், வெளிவராத படத்திற்கு நான் எப்படி விமர்சனம் செய்யமுடியும்...?
அதே போல, முதலில் கல்யாணம் நடக்க வேண்டும், பின் சாந்தி கல்யாணம், பின் தான் குழந்தை பிறக்கும் குழந்தை பிறந்த பின் தான் அது ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என தெரிந்த பிறகுதான் பெயர் வைக்க முடியும்...எதுமே நடக்காமல் எப்படி பதிலளிப்பது என கூறியுள்ளார்.
