trailer review of vijay sethupathies up coming movie
காஷ்மோரா இயக்குனர் கோகுலின் இயக்கத்தில் ”மக்கள் செல்வன் விஜய் சேதுபதி” தயாரித்து, நடித்திருக்கும் படம் ”ஜுங்கா”. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு வித்தியாசமான கெட்டப்பில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடை பெற்றது. மேலும் ஜுங்கா திரைப்படத்தின் இரண்டாவது நீளமான டிரெயிலரும் இன்று ரிலீசாகி இருக்கிறது.

இந்த டிரெயிலரை பார்க்கும் போதே தெரிகிறது ஜுங்கா ஒரு பிரம்மாண்டமான படம் தான் என்று. ஜுங்கா ட்ரெயிலரில் வரும் பெரும்பாலான காட்சிகள் பாரிஸிலும் ஐரோப்பாவிலும் வைத்து எடுக்கப்பட்டிருக்கின்றன. அங்கு படம் பிடிக்கப்பட்டிருக்கும் கிளாசியான பின்னணிகள் படத்திற்கு நல்ல தோற்றத்தை தருகிறது.
ஜூங்கா திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ,சாயிஷா மற்றும் மடோனா சபாஸ்டியன் ஆகியோர் நடித்திருக்கின்றனர். காமெடி கலந்த டான் கதை தான் இந்த ஜூங்கா என்பது டிரெயிலரை பார்க்கும் போதே தெரிகிறது. இவர்களுடன் ஜூங்கா படத்தில் சரண்யா பொன்வண்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். காமெடியில் யோகி பாபு கலக்கி இருக்கிறார். இதை ஜுங்கா இசை வெளியீட்டு விழாவின் போது விஜய் சேதுபதியே தெரிவித்திருக்கிறார்.
டான் எப்பவுமே பணத்தை அள்ளி இறைக்கிறவங்களா தான் இருக்கனுமா? சிக்கனமா இருக்க கூடாதா? இந்த படத்தில் நான் சிக்கனமான டானாக தான் நடித்திருகிறேன். எனவும் அப்போது தெரிவித்திருக்கிறார் விஜய் சேதுபதி. ஆனால் படத்தை நல்ல தாராளமாக செலவு செய்துதான் எடுத்திருக்கிறோம், என்றும் அப்போது அவர் தெரிவித்திருக்கிறார்.
ட்ரெயிலரில் வரும் ஒரு காட்சியில் கூட, ஜுங்கா ஹீரோயினிடம் கஞ்சத்தனமாக தான் பேசுவார். இந்த டிரெயிலரிலேயே காமெடி வசனங்கள் நிறைய இடம்பெற்றிருக்கின்றன. அதே போல ஆக்ஷன் காட்சிகளும் மிரட்டலாக இருக்கின்றன. இதனால் ஜுங்கா ட்ரெயிலர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
