சர்வதேச வணிக பத்திரிக்கையான 'Forbs' வருடம் தோறும் பல்வேறு பிரிவுகளின் அடிப்படையில் டாப் 100 இந்திய பணக்கார்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. 

அதன் அடிப்படையில் தற்போது 2017 ஆம் ஆண்டிற்கான பணக்கார நடிகர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் தமிழ் சினிமாவின் சிங்கம் 'சூர்யா' 34 கோடிகளுடன் 25 வது இடத்தைப் பிடித்துள்ளார்.

தல அஜித் 31.75 கோடிகளுடன் 27வது இடத்தைப் படித்துள்ளார்.

இளைய தளபதி விஜய் 29 கோடிகளுடன் 31வது இடத்தைப் பிடித்துள்ளார்.

வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் ஜெயம் ரவி 18 கோடிகளுடன் 39வது இடத்தைப் பிடித்துள்ளார்.

இதே போல் மிகவும் கஷ்டப்பட்டு முன்னணி நடிகர் என்கிற இடத்தைப் பிடித்த மக்கள் செல்வன் விஜய்சேதுபதி 14.08 கோடிகளுடன் 54வது இடத்தைப் பிடித்துள்ளார்.

நடிகர் தனுஷ் 11.25 கோடிகளுடன் 70வது இடத்தைப் பிடித்துள்ளார். 

மேலும் இதில் கோலிவுட் திரையுலகை சேர்ந்த பிரபல பாடகர் ஒருவரும் இடம்பெற்றுள்ளார் அவர் வேறு யாரும் இல்லை... ஆஸ்கர் நாயகன் 'ஏ.ஆர்.ரகுமான் தான். இவர் கடந்த வருடம் மட்டும் 57.63 கோடி சம்பாதித்து இந்த பட்டியலில் 12 வது இடத்தைப் பிடித்துள்ளார்.