too much of security for super stars next movie
காலா திரைப்படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜாவின் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். ஜிகிர்தண்டா, பீசா போன்ற படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜா, ரஜினியை வைத்து ஒரு வித்தியாசமான படத்தை எடுக்கவிருக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருக்கிறது.

ரஜினி-கார்த்திக் சுப்புராஜா கூட்டணியில் இந்த திரைப்படத்திற்கான தொடக்க கட்ட வேலைகள், வட இந்தியாவில் வைத்து நடைபெற்றுவருகிறது. டார்ஜிலிங்கில் வைத்து நடைபெற்ற ஆரம்ப கட்ட படப்பிடிப்பின் போது, ரஜினி அங்கு வந்திருப்பதை அறிந்து கூட்டம் கூடிவிட்டதாம். இதனால் படக்குழு உடனடியாக அந்த இடத்தை விட்டு வேறு இடம் சென்றிருக்கிறது.

இந்த படத்தில் ரஜினிகாந்த் ஒரு வித்யாசமான கெட்டப்பில் நடிக்க விருக்கிறாராம். இதனால் அந்த கெட்டப் வெளியில் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக படக்குழு எக்கச்சக்க பாதுகாப்பு போட்டிருக்கிறதாம். வெளி நபர்கள் யாரும் உள்ளே நுழைந்துவிடாதபடி அடையாள அட்டை போன்றவை தீவிரமாக சோதனைக்குட்படுத்தப் படுகிறதாம்.
இதனால் படப்பிடிப்பு நடைபெறும் இடத்திற்குள் செல்ஃபோன், பிரைவேட் கேமரா போன்றவற்றை கூட தடை செய்திருக்கின்றனராம் படக்குழுவினர். கபாலி படத்தில் கூட இதே போல தான் ரஜினியின் லுக் ரகசியமாக வைக்கப்பட்டது. பின்னர் விமான நிலையத்தில் வைத்து ரசிகர்கள் எடுத்த படங்களால் சில பிரச்சனைகள் உண்டானது. இதனை தவிர்க்கவே இம்முறை இந்த கடுமையான பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறதாம்.
