Tony Ja movie will be released in Tamil.
மூன்று வருடங்களுக்கு முன்பு ரிலீசாகி வசூல் வேட்டையாடிய ஹாலிவுட் நடிகர் டோனி ஜாவின் படம் தற்போது தமிழில் டப் செய்யப்பட்டு ‘வேதாள வீரன்’ என்ற பெயரில் வெளியாக இருக்கிறது.
நடிகர் ஜாக்கிசானுக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் தாய்லாந்தை சேர்ந்த நடிகர் டோனி ஜா.
சின்ன சின்ன படங்களில் நடித்து வந்த டோனி ஜா ‘ஓன்ங் பேக்’ படங்களின் பாகங்கள் மூலம் புகழ் பெற்றார்.
சீனப்படங்களில் நடித்து வந்த டோனி ஜா நடித்த முதல் ஹாலிவுட் படம் ‘ஸ்கின் டிரேட்’.
இந்தப் படம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது. இந்தப் படத்தை. எக்காச்சி உக்கோர்தம் இயக்கி இருந்தார்.
படத்திற்கு பென் நாட் ஒளிப்பதிவு செய்திருந்தார்,
ஜாக்கப்குரோத் இசையமைத்து இருந்தார்.
படம் ஆங்கிலம், தாய், செர்பியன் ஆகிய மொழிகளில் வெளியானது. ஒன்பது மில்லியன் டாலரின் தயாரான படம் 384 மில்லியன் டாலர் வசூலித்தது.
தற்போது இந்தப் படத்தை தமிழில் டப் செய்து ‘வேதாள வீரன்’ என்ற பெயரில் வெளியிடுகிறார்கள். ஏற்கெனே ஓன்ங் பேக் படங்கள் மூலம் டோனிஜா தமிழ் ரசிகர்களுக்கு நன்றாகவே அறிமுகமானவர். அதில் அவர் பாரம்பரிய சண்டை காட்சிகளில் நடித்திருப்பார்.
இதில், அவர் நவீன சண்டை காட்சிகளில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தை வெங்கிஸ்பிலிம் இண்டர் நேஷனல் மற்றும் எஸ் 2 சினிமா நிறுவனங்கள் இணைந்து வெளியிடுகிறது.
