நடிகர் ரஜினிகாந்த் நடித்த காலா படத்தின் டீசர் நாளை காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என அப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் தெரிவித்துள்ளார். 

பா.ரஞ்சித் இயக்கிய 'காலா' திரைப்படம் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகியுள்ளது. இப்படம் ஏப்ரல் 27 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இப்படத்தின் பல்வேறு பணிகளும் முடிவுற்ற நிலையில், இதன் டீசர் மற்றும் ஆடியோ லான்ச்சுக்கான வேலைபாடுகள் நடைபெற்று வருகின்றன. 

'காலா' படத்தின் டீசர் மார்ச் 1ம் தேதி வெளியாகும் என அந்த படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான தனுஷ் ஏற்கனவே தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது தள்ளிப்போகியுள்ளது. 

இதனிடையே தற்போது 'காலா' படத்தின் 30 நொடிகள் கொண்ட ஒரு டீசர் சமூக வலைத்தளத்தில் லீக்காகி வைரலாகியது. 

இந்நிலையில், காலா படத்தின் டீசர் நாளை காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என அப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் தெரிவித்துள்ளார்.