Mission Impossile 7 Trailer : மிஷன் இம்பாசிபிள் டெட் ரெக்கனிங் படத்தின் மிரட்டலான ட்ரைலரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் பதைபதைக்க வைக்கும் ஆக்‌ஷன் காட்சிகளில் கெத்தாக நடித்துள்ளார் டாம் க்ரூஸ்.

ஹாலிவுட்டின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் டாம் க்ரூஸ். இவர் நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு உலகம் முழுவதும் மவுசு உண்டு. தற்போது டாப் கன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் டாம் க்ரூஸ். இப்படம் வருகிற ஜூன் 27-ந் தேதி உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீசாக உள்ளது.

இந்நிலையில், டாம் க்ரூஸ் நடித்துள்ள மற்றொரு பிரம்மாண்ட படமான மிஷன் இம்பாசிபிள் படத்தின் 7-ம் பாகத்தின் முக்கிய அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது. கிறிஸ்டோபர் மெக்யூரி இயக்கியுள்ள இப்படத்தில் ஆக்‌ஷன் ஹீரோவாக மிரட்டி உள்ளார் டாம் க்ரூஸ். 

மிஷன் இம்பாசிபிள் படத்தின் முந்தைய பாகங்கள் ஹாலிவுட்டில் வசூல் சாதனை நிகழ்த்தி உள்ளது. இதன்காரணமாக மிஷன் இம்பாசிபிள் படத்தின் 7-ம் பாகத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்திற்கு மிஷன் இம்பாசிபிள் டெட் ரெக்கனிங் என பெயரிடப்பட்டு உள்ளது.

இப்படம் இரண்டு பாகங்களாக தயாராகி உள்ளது. இதன் முதல் பாகம் வருகிற 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் 14-ந் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் இரண்டாம் பாகம் 2024-ம் ஆண்டு வெளியிடப்படும் என தெரிவித்துள்ளனர்.

அத்துடன் மிஷன் இம்பாசிபிள் டெட் ரெக்கனிங் படத்தின் மிரட்டலான ட்ரைலரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் பதைபதைக்க வைக்கும் ஆக்‌ஷன் காட்சிகளில் கெத்தாக நடித்துள்ளார் டாம் க்ரூஸ். இப்படம் அவரது ரசிகர்களுக்கு நிச்சயம் ஆக்‌ஷன் விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... அடுத்தடுத்து வாரிசு நடிகர்களுடன் கூட்டணி அமைக்கும் அருண்ராஜா காமராஜ்... நெக்ஸ்ட் படம் யாரோடு தெரியுமா?

Scroll to load tweet…