பலரது குழந்தை பருவத்தை குதூகலமாக வைத்திருந்த கார்ட்டூன் நிகழ்ச்சிகளில் மிக முக்கியமான பங்கு டாம் அண்ட் ஜெர்ரி நிகழ்ச்சிக்கு உண்டு. நீங்கள் யாராக இருந்தாலும் உங்களது குழந்தை பருவத்தில் ஒரு முறையாவது டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூனை பார்க்காமல் இருந்திருக்க முடியாது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை டாம் அண்ட் ஜெர்ரி தொடருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உண்டு. 

உலகப்புகழ் பெற்ற இந்த கார்ட்டூனை உருவாக்கி இயக்கியவர் இல்லுஸ்ட்ரேட்டர் ஜீன் தீச்.1924ம் தேதி அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் பிறந்தவர். 1959ம் ஆண்டு பிரேக் நகருக்கு சென்றார். அங்கு அவரது வருங்கால மனைவியை சந்தித்தார், வெறும் 10 நாட்கள் மட்டுமே தங்க முடிவெடுத்த அவர், திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை அங்கேயே கழிக்க திட்டமிட்டார். 

இதையும் படிங்க: என்ன கன்றாவி போஸ் இது... ஊரடங்கிலும் அடங்காத ஷாலு ஷம்மு... கடுப்பான நெட்டிசன்கள்...!

புகழ் பெற்ற ஆஸ்கர் விருது வென்றவரான ஜீன் தீச், அனிமேட்டர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் என்ற பன்முக திறமைகளைக் கொண்ட ஜீன் தீச் செக் குடியரசின் பிராக் நகரில் உள்ள குடியிருப்பில் கடந்த வியாழக்கிழமை உயிரிழந்தார். 95 வயதான ஜீன் தீச்சுக்கு முதல் திருமணம் மூலம் 3 மகன்கள் உள்ளனர். 

இதையும் படிங்க: தாவணி எங்கம்மா... பாவாடை ஜாக்கெட்டுடன் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்தை கலாய்க்கும் நெட்டிசன்கள்...!

ஜீன் தீச்சின் மன்ரோ என்ற அனிமேஷன் குறுப்படம் 1960ம் ஆண்டு சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றார்.  “Here’s Nudnik” and “How to Avoid Friendship” ஆகிய அனிமேஷன் படங்களுக்காகவும் அகாடமி விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டார். டாம் அண்ட் ஜெர்ரி மட்டுமல்லாது மற்றொரு புகழ்பெற்ற அனிமேஷன் தொடரான பாப்பாய் என்ற கார்ட்டூனின் சில எபிசோட்களையும் இயக்கியுள்ளார். பல்வேறு புகழுக்கு சொந்தக்காரரான ஜீன் தீச் மரண செய்தி கேட்டு அவரது ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.