சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு இன்று பெருத்த ஏமாற்றம் தான் இதனால் ரசிகர்கள் கொஞ்சம் சோகமாக தான் இருக்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு நாளைக்கு வர இருக்கும் டீசர் பற்றிய ஒரு சுவாரிஸ்யமான செய்தி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் காலா திரைப்படம் வரும் ஏப்ரல் 27 ல் வெளியாகவுள்ளது. கபாலி படத்தை இயக்கிய ரஞ்சித் மும்பை கதையை கொண்டு காலா படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தின் டீசர் இன்று வெளியாவதாக இருந்தது. ஆனால் காஞ்சிபுரம் சங்கராச்சாரியரின் இறுதி சடங்கு காரணமாக டீசர் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டதாக நடிகர் தனுஷ் ட்விட்டரில் தகவல் வெளியிட்டார். தற்போது டீசர் நாளை வெளியாகவுள்ளது. இதில் ஸ்பெஷல் விசயம் என்றால் பிரபல ராப் இசை பாடகர் யோகி பி இப்படத்திலும் பாடியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இதுகுறித்து ட்விட்டரில் அவர் யோகிபாபுவுடன் காலாவில் பணியாற்றியதில் மகிழ்ச்சி. ஒரு சிறந்த மனிதன், வெறித்தனமான திறமை. காலா டீசருக்காக பங்களிப்பை கொடுத்ததற்கு நன்றி யோகி பிரதர். பிரிந்து மேய்ந்து விட்டீர்கள் ஐயா என குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்தால் ஏதோ வெயிட்டாக பாடியிருப்பார் என எதிர்பார்க்கலாம். யோகி பி விவேகம் படத்தில் பாடி அசத்தினார்.

தல’யின் அடுத்த படத்தை சதுரங்கவேட்டை இயக்குனர்தான் என தகவல் கசிந்துள்ளது

அஜித்தின் விஸ்வாசம் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவே இல்லை இருந்தும் அஜித்தின் அடுத்த படத்தின் இயக்குனர் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அஜித்தின் முக்கிய வட்டாரம் கூறுகிறது பொதுவாக அஜித் ஒரு படம் முடிந்தவுடன் தான் அடுத்த படம் அறிவிப்பு வரும் ஆனால் இந்த முறை கொஞ்சம் மாற்று கருத்துடன் அதுவும் சூப்பர் ஹிட் இயக்குனர் மட்டும் இல்லமால் வித்தியாசமான கதை களம் சொல்லும் இயக்குனருடன் ஜோடி சேருகிறார்.

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று’ ஆகிய வெற்றிப் படங்களின் இயக்குனர் வினோத். சமீபத்தில் விஜய், அஜித் ஆகிய இருவரையும் சந்தித்து பேசியிருக்கிறார்கள். முன்னணி நடிகர்கள் இருவருமே வினோத்துடன் பணிபுரிய அவர்களது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இருவரிடமும் வினோத் கதையைப் பற்றி ஆலோசனை செய்துள்ளார். அவர்களில் அஜித் நடிக்கும் படத்தை வினோத் அடுத்து இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. விஜய், அடுத்த சில படங்கள் குறித்து ஏற்கெனவே முடிவு செய்துள்ளதால் அவருடன் வினோத் இயக்க உள்ள படம் தள்ளிப் போகலாம்.

‘விஸ்வாசம்’ படத்திற்குப் பிறகு வேறு எந்தப் படத்திற்கும் சம்மதிக்காமல் இருக்கும் அஜித் வினோத்திற்கு சம்மதம் தெரிவித்துவிட்டாராம். அவரும் கதை விவாதத்தில் இறங்கியுள்ளதாகத் தகவல். ‘விஸ்வாசம்’ படம் குறுகிய காலத் தயாரிப்பாக உருவாக உள்ளது. அப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் அஜித் , வினோத் இணையும் புதிய படம் உருவாகும் என தெரிகிறது.

படபிடிப்புக்கு வராமல் டிமிக்கி கொடுத்த வடிவேலு... இழுத்து கோர்த்துவிட்ட ஷங்கர்!

ஷங்கர் தயாரிப்பில் கடந்த 2006ஆம் ஆண்டு வெளியாகிய 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி' திரைப்படம்  நல்ல வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை அதே வடிவேலு, சிம்புதேவன் கூட்டணியில் தயாரிக்க ஷங்கர் முடிவு செய்தார். அதன்படி லைகா மற்றும் ஷங்கர் இணைந்து தயாரிக்கும் 'இம்சை அரசன் 24ஆம் புலிகேசி' என்ற பெயரில் படம் தொடங்கப்பட்டு படப்பிடிப்பும் சில நாட்கள் நடைபெற்றது.

இந்த நிலையில் சிம்புதேவனின் இடையே பிரச்சனை உருவானதால் வடிவேலு படப்பிடிப்புக்கு வருவதை நிறுத்திக்கொண்டார். இதனால் சுமார் ரூ.6 கோடி அமைக்கப்பட்ட செட் பயன்படுத்தப்படாமல் உள்ளது.

இதனால் டென்ஷனான படத்தின் தயாரிப்பாளர் ஷங்கர் நடிகர் சங்கத்திடம் புகார் செய்ய, ஷங்கரின் புகாருக்கு விளக்கம் அளிக்கும்படி வடிவேலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இருந்தபோதிலும் வடிவேலு தரப்பில் இருந்து எந்தவித ரியாக்சனும் இல்லாததால், இந்த படத்திற்காக வடிவேலுவுக்கு கொடுத்த ஒன்றரை கோடி ரூபாய் அட்வான்ஸ் மற்றும் படப்பிடிப்புக்காக செலவு செய்த செட்டின் மதிப்பு ரூ. 6 கோடி ரூபாய் மற்றும் இந்த பணத்திற்கான வட்டி ஆகியவை சேர்த்து வடிவேலு ரூ.9 கோடி கட்ட வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் வடிவேலுவுக்கு கெடு விதித்தது. இதன்பின்னர்தான் நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த வடிவேலு, நடிகர் சங்க தலைவர் நாசரிடம் இனிமேல் ஒழுங்காக படப்பிடிப்புக்கு வருவதாக் வாக்குறிதி அளித்ததால் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.