today evening Kamal Viswaroopam first look is released on Twitter

கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியாகி சக்க போடு போட்ட கமல் நடிப்பில் வெளியான பிரமாண்ட படமான விஸ்வரூபம் படத்தின் அடுத்த பாக மான 'விஸ்வரூபம் 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகிறது என்று கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

'விஸ்வரூபம்' வெளியான உடனே, 'விஸ்வரூபம் 2' படத்தில் எடுக்க வேண்டிய காட்சிகளுக்கு படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது 'விஸ்வரூபம் 2' படத்தின் உரிமையை வாங்கினார் ஆஸ்கர் V ரவிச்சந்திரன். ஆனால், படத்திற்கான பணிகள் தாமதம் ஆனது.

இதனால், 'உத்தம வில்லன்', 'பாபநாசம்' ஆகிய படங்களில் தொடர்ச்சியாக கமல் நடித்தார். 'உத்தம வில்லன்', 'பாபநாசம்', 'தூங்காவனம்' என கமல் நடிப்பில் உருவான படங்கள் வெளியான நிலையில், 'விஸ்வரூபம் 2' வெளியீடு எப்போது ரசிகர்கள் தலையை பிய்த்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில், 'விஸ்வரூபம் 2' படத்தை ஆஸ்கர் ரவிச்சந்திரனிடமிருந்து கமலே கைப்பற்றியுள்ளதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தார்கள். இதனால் விரைவில் இப்படத்தின் டப்பிங் உள்ளிட்ட இதர இறுதிகட்ட பணிகள் துவங்கும் என தெரிவித்தார்கள்.

இந்த சூழலில் கமலின் நீண்டநாள் படைப்பான 'விஸ்வரூபம் 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 7 மணிக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடவுள்ளனர். இது தொடர்பாக கமல் தன் ட்விட்டர் பக்கத்தில், '' 'விஸ்வரூபம் 2' படத்தின் தமிழ், தெலுங்கு, இந்தி போஸ்டர்கள் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகிறது'' என்று அறிவித்துள்ளார். 'விஸ்வரூபம் 2' முடித்துவிட்டு, 'சபாஷ் நாயுடு' பணிகளை கமல் துவங்குவார் என தெரிகிறது.