தாறுமாறாக நடிப்பைக் கொட்டியும் கூட படம் ஹிட் ஆகவில்லையென்றால் சில ஹீரோக்களுக்கு பைத்தியமே பிடித்துவிடும். ஆனால் பைத்தியமாய் நடித்ததாலேயே தாறுமாறாய் படம் ஓடி, ஹிட்டடித்த ஹீரோ அவர். ஐ!ய்யோடா என்று ஆளாளுக்கு வியக்குற அளவுக்கு திறமை இருந்தும் கூட லேட்டாய் பிக்கப் ஆன நடிகர் அவர். ஒரு சாமி இல்ல, ரெண்டு சாமி இல்ல பல சாமிகளை வேண்டியும் எந்த மாயாஜாலமும் நிகழாத நிலையில்தான் பைத்தியப்படம் அவரது பிரச்னைக்கான வைத்தியமாய் அமைந்தது. 

அதன் பிறகு அண்ணனோட கிராப் தில்லாக ஏறி தூள் கிளப்ப துவங்கியது. நாலு காசு பார்த்தவனே பேஜாராய் திரியுற இன்டஸ்ட்ரியில் பல கோடிகளை காண துவங்கியவர் மஜாவாக திரியமாட்டாரா என்ன? இவரைப் பார்த்தாலே அருள் வந்தது போல் செட்டில் ஆட துவங்கிவிடுவார்கள் ஹீரோயின்கள். அப்டியொரு ராசி அண்ணனுக்கு. இவரு அப்டியே அள்ளிக் கொண்டு போயி ஓ...ஓஹோன்னு சக்கப்போடு போட்டு வாழ்ந்தார். 

‘உன்னோட நெடுநாள் தவத்துக்கு இப்போதான் வரம் கிடைக்க துவங்கியிருக்குது. நடிப்புல கவனம் வைங்க தம்பி!’ன்னு திரையுலக பிதாமகன்கள் அட்வைஸிய பிறகுதான் அண்ணன் கொஞ்சம் அடங்கினார். ஆனாலும் அந்த ‘கவனி! கவனி! கிரகண ஹீரோயினோ இவரே நகர்ந்தாலும் அவர் இவரை விடவில்லை. ஃபேமிலி வரைக்கும் பஞ்சாயத்து போயும் கூட அந்த நட்பு தீரவில்லை. 

இன்டஸ்ட்ரியில் பல ஹீரோக்களுக்கு  நூறு டேக் போனாலும் சில சீன்கள் ஓ.கேயாகவே ஆகாது. ஆனால் இவரோ பத்து எண்றதுக்குள்ளே சொன்ன வேலையை முடிச்சுட்டு டபுள் ஓ.கே. வாங்கிட்டு கேரவேனுக்குள் கேம் ஆட போகிற மனுஷன். விண்ணுக்கும் மண்ணுக்குமா பாலம் கட்டி நின்னு நடிக்க சொன்னாலும் தெறிக்க விடுற ஆக்டிங் பீமா! நம்மாளு. அதனால்தானோ என்னவோ அந்த மாமி ஹீரோயினும் பல வருஷங்களாகவே இவரை சுத்திச் சுத்தி வந்தார். 

இப்படியாகவே கேரியர் வளர வளர இவரது காதல் சடுகுடுவும் வளர்ந்து கொண்டே போனது. பிள்ளைகள் பெரிதாய் வளர்ந்துவிட்டதால் ஹீரோயின்களுடன் இவர் சுற்றும் விவகாரம் வீட்டில் பிரச்னையாகிக் கொண்டே போனது. அதனால் பப்ளிக்காக தனது வால்தனங்களை சுருட்டி வைத்தவர், வீட்டில் ராமனாகவும் வெளியே வந்தால் ராவணனாகவும் அவதாரமெடுக்க துவங்கினார். சிம்பிளாய் சொல்வதென்றால் இருமுகனாக வலம் வந்தார் போங்கள்!

இந்த நிலையில் மெகா இயக்குநரின் டெகா பிராஜ்கெட்டுக்காக கிட்டத்தட செத்துப் பிழைச்சு நடிச்சார் இந்த நடிப்பு அரக்கன். ஆனால் படம் எதிர்பார்த்த வசூலையும், பாராட்டையும் கொட்டவில்லை. லேசாய் மனம் விட்டுப் போனவருக்கு அடுத்தடுத்தாய் வந்த ப்ராஜெக்டுகளும் செட்டாகவில்லை. தூரத்தில் தெரிந்த துருவ நட்சத்திரம் கூட அவர் நகர நகர காணாமல் போனது. 

கமிட் ஆகும் ப்ராஜெக்டுகளில் எல்லாமே இவர் நூறு சதவீதம் உழைப்பைக் கொட்டியும் எதுவுமே மனம் லயிக்கும் ஹிட்டை எதுவுமே தரவில்லை. இதனால் நொந்து நூடுல்ஸ் ஆனவர் மீண்டும் பப்ளிக்காக, பப்பாளிக்காக நாயகிகளோடு வலம் வந்து தன் மன சங்கடங்களை திசை திருப்பிக் கொள்ளும் முயற்சியில் இறங்கினார். 

அதற்காக லேட்டஸ்டாக வர் ஸ்கெட்ச் போட்டு தூக்கிய ஜீவன், அவரது மகள் வயது பெண்ணாம். அதுவும் நண்பனின் மகளாம். தன் படத்தில் அந்தப் பொண்ணு நடிக்கையில் இப்படி கமிட் ஆகிவிட்டது காதலும், கலாபமும். யாரெல்லாமோ சொல்லிப் பார்த்தும் ஒண்ணும் வேலைக்காகவில்லை. 

தெய்வமகள் போல் பில்ட் அப் கொடுத்து இவர் விழுந்து விழுந்து காதலித்த மனைவி இப்போது தாண்டவமாடிக் கொண்டிருக்கிறார்! ஆனால் இந்த அங்கிள் அண்ணன் தான் மாறுவதில்லையாம்!