நான் தல ரசிகை அதுதான் என் பலம்!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி ஸ்டைலில் மிக பெரிய ரசிகர் பட்டாளத்துடன் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தல அஜித். இவருக்கு ரசிகர்களை தாண்டி திரையுலக பிரபலங்களும் பிடித்த நபராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது பிரபல கன்னட நடிகையான ஹர்ஷிகா பூஞ்சா என்பவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நான் தல அஜித்தின் தீவிர ரசிகை. அதுவே எனக்கு மிக பெரிய பலம். அவருடன் இணைந்து நடிக்க காத்துக் கொண்டிருக்கிறேன் என கூறியுள்ளார்.

“தல அஜித்திடம் நிச்சயம் அந்த கேள்வியை கேட்ப்பேன்”

தமிழ் சினிமாவில் தனக்கென மிக பெரிய ரசிகர்கள் பட்டாளத்துடன் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தல அஜித். பெரும்பாலும் இவர் எந்தவொரு பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள மாட்டார். இவரை சந்திக்கும் வாய்ப்பு பிரபலங்களுக்கே ஒரு சிலருக்கு தான் அமையும்.

ஆனால் ரசிகர்கள், திரையுல பிரபலங்கள் என பலருக்கும் அஜித்தை சந்திக்க வேண்டும். அவருடன் பேச வேண்டும் புகைப்படம் எடுத்து கொள்ள வேண்டும் என ஆசை இருக்கும்.

இந்நிலையில் பிரபல தொகுப்பாளியான நக்ஷத்ரா அஜித்தை பார்க்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. இந்த முறை அவர் ஒட்டு போட திருவான்மியூர் வருவார். அங்கு தான் என் வீடும் உள்ளது. சீக்கிரம் சென்று அவர் வந்தால் ஏன் நீங்கள் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை என கேள்வி கேட்பேன் என கூறியுள்ளார்.

“நோட்டா” பிரீ ப்ரோமோஷன் கிடைக்குமா? தமிழக பாஜகவை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

தெலுங்குவில் உருவாகி இருந்த அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. இவர் தற்போது முதல் முதலாக தமிழில் அறிமுகமாகிறார். இந்த படத்தை இருமுருகன், அரிமாநம்பி ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த் ஷங்கர் இயக்குகிறார். இவருக்கு ஜோடியாக நெஞ்சில் துணிவிருந்தால் படத்தில் நாயகியாக நடித்திருந்த மெஹ்ரீன் நடிக்க உள்ளார்.

ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்திற்கு நோட்டா என பெயர் வைத்துள்ளனர். இந்த டைட்டிலை பார்த்ததும் பலருக்கும் பா.ஜ.க ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நோட்டாவை விட குறைவான ஓட்டுகளை பெற்றதை தான் கலாய்த்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் நெட்டிசன்கள் பா.ஜ.க-வை கிண்டலடித்து வருவதால் படத்திற்கு பிரீ ப்ரோமோஷன் கிடைக்குமா? எனவும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

“போலீச கூப்பிடுவேன்” கதறும் பிக் பாஸ் காயத்ரி

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் எப்படியோ ஒரு விதத்தில் பிரபலமானார்கள். ஆனால் காயத்ரி ரகுராம், ஜூலி ஆகியோர் சமூக வளையதளங்களில் எதை செய்தாலும் ரசிகர்கள் அவரை கலாய்த்து எடுத்து வந்தனர். சிலர் திட்டி தீர்த்தும் வந்தனர்.

இதையெல்லாம் பொறுக்க முடியாத காயத்ரி ரகுராம் இனிமே யார்னா என்னையும் ஜூலியையும் கிண்டல் பண்ணா சும்மா விட மாட்டேன், சைபர் கிரைமில் புகார் அளித்து கண்டுபிடித்து விடுவேன் என கூறியுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் இதையெல்லாம் பார்த்த நெட்டிசன்கள் சமூக வளையதளத்தை விட்டு சென்று விடுங்கள் என கூற இதனால் ட்விட்டரில் பெரும் விவாதமே நடந்து வருகிறது.