BiggBoss5 | யாருக்கு குறைவான ஓட்டு ? யாருக்கு அதிக ஓட்டு ? இதுவரை கணிக்கப்பட்டுள்ள பிக் பாஸ் 5 வெற்றியாளர்!!


BiggBoss | ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கும் இன்றைய பிக் பாஸ் எபிசோட்டில் வீட்டிலிருந்து 8 வது போட்டியாளர் வெளியேற்றப்படவுள்ளார்.

today bigg boss5 elimination

கடந்த வார எபிசோட் படி பள்ளிக்கூட டாஸ்கின் போது  முழுக்க முழுக்க அக்‌ஷரா மீது தவறிருக்கும் பட்சத்தில் இந்த வார இறுதி எபிசோட்டை தொகுத்து வழங்கிய ரம்யா கிருஷ்ணன் அக்‌ஷராவை கொஞ்சியதோடு, சிபியை குற்றவாளியாக்கியது ரசிகர்களை எரிச்சல் மூட்டியுள்ளது. இவ்வாறு எதிர்பாராத பல திருப்பங்களால் அதிரடியாக இருந்தது. இதை தொடர்ந்து இன்று நடைபெறவுள்ள எலிமினேஷன் குறித்த எதிர்பார்ப்பு எகிரிவுள்ளது. 

போன வாரம் பெற்ற ஓட்டுக்கள் படி பிக் பாஸ் 5ன்  8வது வார எலிமினேஷன் குறித்த பரபரப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு ரசிகர்களால் முக்கிய போட்டியாளர் என்று பார்க்கப்பட்ட, இசைவாணி குறைவான வாக்குகள் பெற்று வெளியேறினார்.

நாடியா, நமிதா மாரிமுத்து, அபிஷேக், சின்னப்பொண்ணு, சுருதி  மதுமிதா மற்றும் இசைவாணி  என 7 நபர்கள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.  இவர்களில் அபிஷேக் மீண்டும் வைல்ட் கார்ட் ஏறி மூலம் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார். 

இந்நிலையில் இன்று வெளியேறவுள்ள போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நிரூப் மற்றும் ஜக்கி பெரி ஆகியோர் குறைவான ஓட்டுக்களை பெற்று கடைசி இரண்டு போட்டியாளர்களாக  நிற்கின்றார்கள்.

today bigg boss5 elimination

இவர்களில் நிரூபுக்கு வெளியில் ஆதரவு அதிகம் என்பதாலும் அவர் பரபரப்புக்கு முக்கிய காரணம் என்பதாலும் அவர் இன்று வெளியேற்றப்பட மாட்டார் என சொல்லப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க பிரியங்கா மற்றும் தாமரை இருவரும் அதிக ஓட்டுகளை கைப்பற்றி முதல் இரண்டு இடங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். இதுவரையிலான எபிசோட் படி இருவரில் ஒருவர் வெற்றியாளர்களாம் என ரசிகர்கள் கருதுகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios